‘கஜபா’க்களின் காலம்!

இந்­தியா புதி­தாக பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி (கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி) என்ற பத­வியை கடந்த ஜன­வரி 1ஆம் திகதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முத­லா­வது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் பாரிய போர்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கிட்­டத்­தட்ட 72 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

சர்­வ­தேச அளவில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்தில் நடந்து வந்த சந்­திப்­புகள், கூட்­டங்­களில், பெரும்­பாலும் இந்­தியா தனது தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரையே அனுப்பி வந்­தது.இப்­போது தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வி­யா­னது, ஒரு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ருக்கு நிக­ரான அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தாக மாறி­யுள்­ளது.

பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்­தி­லான கூட்­டங்­களில், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பங்­கேற்­பதில் சில protocol சிக்­கல்கள் உள்­ளன.

முப்­ப­டை­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தற்கு இந்தப் பதவி அவ­சி­ய­மா­னது என்று, 1999 கார்கில் போருக்குப் பின்னர் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும், இப்­போது தான் இந்­தியா பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, கடந்த 31ஆம் திகதி­யுடன் இலங்­கையின் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்த அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, இரா­ணுவத் தள­ப­தி­யாக உள்ள லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்கப்பட்ட போதே, சர்­வ­தேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தது. குறிப்­பாக, அமெ­ரிக்கா இந்த நியமனத்தைக் கடு­மை­யாக எதிர்த்­தது. கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கமும், வொஷிங்­டனில் உள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் அப்­போது வெளி­யிட்ட கருத்­துக்கள், இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­ருப்­தி­யுடன் நோக்­கப்­பட்­டன.

நம்­ப­க­மான போர்க்­குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால், இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை குறைத்துக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்றும் அமெ­ரிக்கா எச்­சரிக்கை செய்­தி­ருந்­தது.

அந்த எச்­ச­ரிக்­கை­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன கண்­டு­கொள்­ள­வில்லை.
லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கவும், முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்­டி­ருந்தார் என்றும் முன்னர் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால், அவர் தனது பத­வியின் இறு­திக்­கட்­டத்தில் அத்­த­கைய நிய­ம­னங்கள் எதையும் செய்­ய­வில்லை.
இந்த நிலையில், அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை, பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ.

ஜனா­தி­ப­தியின் அதிக நம்­பிக்­கையைப் பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களில் மிக முக்­கி­ய­மா­னவர் லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா. அவர், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­விக்கு பதில் கட­மைக்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மல்ல. இந்த நிய­ம­னத்தின் மூலம், வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற ஒரு செய்தி இருக்­கி­றது.

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த நாடுகள், மனித உரி­மைகள் அமைப்­பு­க­ளுக்கு இந்த நிய­ம­னத்தின் ஊடாக சவால் விடுத்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.

அதுவும், அடுத்த மாதம் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள ஐ.நா மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்தில், இலங்கை விவ­கா­ரமும், குறிப்­பாக, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மன விவ­கா­ரமும், விவா­திக்­கப்­படக் கூடிய ஒரு சூழலில் தான், இந்த நிய­மனம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா விடு­விக்­கப்­ப­டா­ம­லேயே, பதில் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இதி­லி­ருந்து, அவரை இப்­போ­தைக்கு இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து விடு­விக்கும் நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இல்லை என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது. அதே­வேளை, இப்­போ­தைக்கு பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­விக்கு வேறொ­ரு­வ­ரையும் நிய­மிக்கும் திட்­டமும் இல்லை என்பதும் உறு­தியாகி­யுள்­ளது.

ஏனென்றால், லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை விட சேவை மூப்­புள்ள அதி­கா­ரி­யான, கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பியால் டி சில்வா இருந்த போதும், அவர் இந்தப் பதவிக்கு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.அதே­வேளை, 21/4 தாக்­கு­தல்­களை அடுத்து, பாது­காப்பு கட்­ட­மைப்பு மறு­சீ­ர­மைப்புத் தொடர்­பான பரிந்­து­ரைகள் பல முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் முக்­கி­ய­மா­னது, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்­கு­வ­தாகும்.

இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகளில் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி வலு­வா­னது. அந்தப் பதவியை உரு­வாக்­கு­வதன் மூலம், படை­க­ளுக்­கி­டை­யி­லான ஒருங்­கி­ணைப்பு, புல­னாய்வு பரி­மாற்­றங்­க­ளுக்கு வச­தி­யாக இருக்கும் என்று கூறப்­பட்­டது. ஆனால், முன்­னைய அர­சாங்கம் அந்தப் பத­வியை உரு­வாக்­கு­வ­தற்­கி­டையில், அதன் ஆயுள் முடிந்து விட்டது.

முன்­னைய அர­சாங்­கத்தின் பாது­காப்புத் திட்­டங்­களை பின்­பற்­று­வ­தற்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தயா­ராக இல்லை.
அவர், பாது­காப்பு என்ற விட­யத்தில் தன்னை விட மிஞ்­சிய அறி­வுள்­ள­வர்கள் யாரும் இல்லை என்ற போக்கில் செயற்படுபவர்.

அதனை தேர்தல் பிர­சா­ரங்­களின் போது கூட வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.முன்­னைய அர­சாங்­கத்­தினால் பரிந்து­ரைக்­கப்­பட்ட தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி உரு­வாக்­கத்தை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஏற்றுக் கொள்ளும் சாத்தியங்கள் இல்லை.

ஏனென்றால் அந்த நிய­ம­னத்தை செய்தால், அது முன்­னைய அர­சாங்­கத்தின் அடை­யா­ள­மாகத் தெரி­யுமே தவிர, கோத்­தா­பய ராஜபக் ஷவின் தனித்­துவ அடை­யாளம் அதில் இருக்காது. எனவே, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்­கு­வ­தற்குப் பதி­லாக, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­வியை வலுப்­படுத்­து­வதில் கவனம் செலுத்­த­வுள்ளார் என்று கூறப்­ப­டு­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் தொடக்­கத்தில், 1985 நவம்பர் 2ஆம் திகதி, கூட்டு நடவடிக்கை கட்­டளைத் தள­பதி என்ற பதவி முதன் முத­லாக உரு­வாக்­கப்­பட்­டது. அப்­போது, ஜெனரல் திஸ்ஸ வீர­துங்க நிய­மிக்­கப்­பட்டார். பின்னர் அந்தப் பத­வியை, ஜெனரல் சிறில் ரண­துங்க, ஜெனரல் ஹமில்டன் வண­சிங்க, எயர் மார்ஷல் வோல்டர் பெர்­னாண்டோ உள்ளிட்டோர் வகித்திருந்தனர்.

1999ஆம் ஆண்டு இந்தப் பதவி, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. பெயர் மாற்­றத்­துக்குப் பின்னர், இந்தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்ட முதல் அதிகாரி ஜெனரல் றொஹான் தளுவத்த. அவ­ருக்குப் பின்னர் முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள், கடற்­படைத் தள­ப­திகள், விமா­னப்­படைத் தள­ப­திகள் பலர் இந்தப் பத­வியை வகித்து வந்­துள்­ளனர். போர் வெற்­றிக்குப் பின்னர், 2009ஆம் ஆண்டு 35ஆவது இலக்க, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு, இந்தப் பத­விக்கு சட்ட அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டது.

இப்­போ­தைய அர­சாங்கம், இந்தச் சட்­டத்தில் திருத்தம் செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிக்கு கூடுதல் அதி­கா­ரங்­களை அளிக்கும் வகையில், சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் நோக்கம்.

அதன் பின்னர், மேஜர் ஜெனரல் சுமேத பெரே­ராவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்க அவர் திட்­ட­மிட்­டுள்ளார் என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்குத் தகு­தி­வாய்ந்த அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராக கரு­தப்­பட்­டவர். இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருந்த அவர், 2018இல் 55 வயதை எட்­டிய நிலையில், ஓய்வு பெற்றார்.அவரை மீண்டும் சேவைக்கு கொண்டு வந்து பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிப்­பது ஜனா­தி­ப­தியின் திட்­ட­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

ஆனால், இது­வ­ரையில் கூட்டுப் படை­களின் தள­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்­த­வர்கள் அனை­வ­ருமே, முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­க­ளா­கவோ, கடற்­படை அல்­லது விமா­னப்­படைத் தள­ப­தி­க­ளா­கவோ தான் இருந்­தி­ருக்­கின்­றனர். ஏனென்றால், இந்தப் பத­வி­யா­னது, முப்­ப­டை­க­ளி­னதும் தள­ப­தி­க­ளுக்கும் மேலா­னது.
எனவே தான், ஜெனரல், அட்­மிரல், எயர் சீவ் மார்ஷல் போன்ற பத­வி­க­ளை­யு­டைய அதி­கா­ரிகள் தான் இந்தப் பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஆனால், சுமேத பெரேரா, மேஜர் ஜென­ர­லா­கவே ஓய்வு பெற்­றவர். எனவே அவரை மீண்டும் பணிக்கு அழைத்து, பதவி உயர்வு கொடுத்து தான், இந்தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டி­யி­ருக்கும்.

பாது­காப்புச் செய­ல­ராக உள்ள, கமல் குண­ரத்ன மேஜர் ஜெனரல் தரத்தில் தானே இருக்­கிறார். பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக ஏன் மேஜர் ஜெனரல் இருக்கக் கூடாது என்று வாதிட முடி­யாது.அது, ஒரு அர­சாங்க சிவில் பதவி. ஆனால் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்­பது ஒரு படைத்­துறைப் பதவி நிலை. அங்கு, பதவி வரிசை ஒழுங்கு ஒன்று பேணப்­படும். இதனைக் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எதற்­காக ஓய்­வு­பெற்றுச் சென்ற, மேஜர் ஜெனரல் சுமேத பெரே­ராவை இந்தப் பத­விக்கு நிய­மிக்க முற்­ப­டு­கிறார் ?

மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, எயர் மொபைல் டிவிசன் உரு­வாக்­கப்­பட்ட காலத்தில் இருந்து பணி­யாற்­றிய ஒருவர். 53 ஆவது டிவி­சனின் 3 ஆவது பிரிகேட் தள­ப­தி­யா­கவும் இருந்­தவர். புலி­க­ளுக்கு எதி­ரான போர் நட­வ­டிக்­கை­களில் மிகத் தீவி­ர­மாகப் பங்­கெ­டுத்­தவர்.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக, கஜபா றெஜி­மென்ட்டின் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய முக்­கி­ய­மான அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராவார். 1983ஆம் ஆண்டு இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்ட போது முதலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் இவரும், ஒருவர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடன், கஜபா றெஜிமென்டில் இணைந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

போரை நடத்திய காலங்களை விட, போருக்குப் பிந்திய காலங்களில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ‘கஜபா’க்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்.அவரது வலது, இடது கரங்களாக இருப்பவர்கள் அனைவருமே ‘கஜபா’க்கள் தான்.

தற்போது, ஜனாதிபதியாக இருக்கும் கோத்தாபய ராஜபக் ஷ, பாதுகாப்பு செயலராக இருக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக உள்ள மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, என அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் கஜபா றெஜிமெட்டை சேர்ந்தவர்கள் தான்.

அந்த வரிசையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாகவும், கஜபா படைப்பிரிவின் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நிரந்தரமாக இந்தப் பதவிக்கு இன்னொரு ‘கஜபா’வான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இது ‘கஜபா’க்களின் காலம்.

– சுபத்ரா