குண்டுத் தாக்குதல் -அமெரிக்காவில் வழக்குகள் தொடுக்கக்கூடிய சாத்தியம்!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக அமெரிக்கா சட்டநடவடிக்கை எடுக்க கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது.

அந்த தாக்குதல்களில் அமெரிக்க பிரஜைகளும் கொல்லப்பட்டதினால் அமெரிக்கா அதன் நீதிமன்றமொன்றில் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க கூடும் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று தங்களது பிரஜைகளை பலிக்கொடுத்த மற்றைய நாடுகளும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, இந்தியா போன்றவை வழக்குகளை தொடுக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.