குவின்ஸ்லாந்து – தமிழ் எழுத்தாளர் விழா -2016

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு 27 – 08 – 2016 இல் கோல்ட்கோஸ்டில் நடைபெறும்.

நடைபெறும் இடம்:   Auditorium, Helensvale Library, Helensvale Plaza
Helensvale 4212, Gold coast, QLD

இவ்விழாவில் கண்காட்சிகள், கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.