அகதிப்படகுகளை திருப்பி அனுப்புவதற்கு காசு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!!

நியுசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதி தஞ்சம் கோரிவந்தவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவதற்கு படகை செலுத்தி வந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது

பங்களாதேஸ் இலங்கை மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து அகதி தஞ்சம் கோரிவந்த 65 பேரை கொண்ட படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்துள்ளார்கள்.

இடைமறிக்கப்பட்டு அனைவரும் கடற்படை கப்பலில் ஏற்றப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டது போன்று வைத்திருந்துள்ளனர்.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கே பெருந்தொகையான பணம் வழங்கப்பட்டு மனிதாபிமான முறைகளை மீறி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுர் காவற்றுறை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்படி படகை செலுத்திவந்த ஆறுபேருக்கு 5000 டொலர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

inq-boatpeopleதனது கண்ணால் அப்பணத்தை கண்டதாகவும் ஆறு கறுப்பு பிளாஸ்ரிக் பைகளில் இப்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மறுப்பு தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டற்றன் மேலதிகமான தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்.

இச்சம்பவம் பற்றி நியுசிலாந்து அரசுக்கு அகதி தஞ்சம் கோரிய 65 பேரினால்; எழுதப்பட்டுள்ள கடிதத்தில் 7000 டொலர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதம் அந்நாட்டு அரசு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

Source: Fairfax Media