Home / திரைமுரசு / சூர்யாவின் சொடக்கு-க்கு கிடைத்த வரவேற்பு
201710291131484659_Suryas-Sodakku-get-Good-Response_SECVPF

சூர்யாவின் சொடக்கு-க்கு கிடைத்த வரவேற்பு

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு..’ பாடல் இரண்டு நாட்களில் அதிக பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

அனிருத் இசையில் ‘சொடக்கு…’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சொடக்கு பாடல் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. முழு பாடல் எப்போது வெளியாகும் என்று அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இதை தொடர்ந்து சொடக்கு முழு பாடல் நேற்று முன்தினம் வெளியானது. குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் அனைவரையும் முனுமுனுக்க, ஆட்டம் போட வைக்கும் இசையை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசித்து விரும்பு கேட்கும் வகையில் உள்ள ‘சொடக்கு…’ பாடலை இரண்டே நாட்களில் 2 மில்லியன் பேர் யூடியூப்பில் பார்த்து, கேட்டு ரசித்துள்ளனர்.

அனிருத் இசையில், பிரபல பாடகர் ஆந்தோனி தாசன் குரலில் உருவாகியுள்ள சொடக்கு பாடல் பட்டி தொட்டி என அனைத்து இடங்களில் ஒலித்து வருகிறது.

About குமரன்

Check Also

201710261151215821_Aravind-swami-joins-to-Naragasooran-team_SECVPF

`நரகாசூரன்’ படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி!

துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் `நரகாசூரன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அரவிந்த் ...