Tag Archives: ஆசிரியர்தெரிவு

டெல்டா மாறுபாட்டால் அவுஸ்திரேலியாவில் நெருக்கடி

அவுஸ்திரேலியாவின் கொவிட்-19 தடுப்புக் குழு திங்களன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றின் மிகவும் அபாயகரமான டெல்டா மாறுபாடு வெடிப்பால் சிட்னி உள்ளிட்ட பிற இடங்களில் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளினால் ஏறக்குறைய 18 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் அல்லது 70 சதவீத மக்கள் பாதிப்பினை தற்சமயம் எதிர்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்களில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்ட நகராகவும் இருக்கும் சிட்னி, வார இறுதியில் ...

Read More »

போராளி ஜோசெப் மாஸ்டர் /அருளாளன் காலமானார்!

விடுதலைப்போராட்டத்தை நேசித்த   போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் காலமானார் ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது மகளையும் மாவீரராக விடுதலைபோராட்டத்திற்கு ஈகம் செய்திருந்த அவர் போரியல் நூல்களை மொழிபெயர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். தாயகம் நோக்கிய பயணம்’ எனும் லியோன் யூரிஸ் எழுதிய அற்புத படைப்பை கச்;சிதமாய் தமிழாக்கம் செய்திருந்தார் ஜோசெப் மாஸ்ரர். ஈழநாதம் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து அச்சிடப்பட்ட அந்த நூல் கடுமையான பொருளாதார தடையின் மத்தியிலும் பாடசாலைப்பிள்ளைகள் பயன்படுத்தும் பாடக்கொப்பித்தாளில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கிடைத்தும், அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை

ஆஸ்திரேலிய அரசால் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட சுமார் 1,200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை பயண விலக்கு கிடைக்காததால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 2014-ல் Qaraqosh எனும் கிறிஸ்துவ மக்கள் அதிகமுள்ள ஈராக்கிய நகரத்திற்குள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நுழைந்தபோது, முக்லெஸ் ஹபாஷும் அவரது குடும்பத்தினரும் தங்கள் உயிருக்கு அந்நகரை விட்டு வெளியேறி இருக்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து அங்கு நிரந்தரமாக குடியேறியிருக்கின்றனர். இந்த நிலையில், தன்னைப் போல ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள 14 அகதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள அகதிகள் சிலர் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 அகதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “இந்த அரசாங்கம் எங்களை ஒன்பது ஆண்டுகளாக சித்ரவதை செய்வது ஏன்? எங்களுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? எங்களால் இனியும் தடுப்பு முகாமில் இருக்க முடியாது,” ...

Read More »

கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் உலகம் தவறு செய்கிறது

எச்.ஐ.வி. நெருக்கடியின்போது நடந்ததைப்போல கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையிலும் உலகம் தவறு செய்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ், ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரசை எதிர் கொள்ளும் நடவடிக்கையை பொறுத்தமட்டில், 1980-களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போதும் செய்கின்றன். எச்.ஐ.வி., எய்ட்ஸ் சிகிச்சையானது வளர்ச்சி அடைந்த நாடுகளில் பரவலாக ஆன பின்னர், குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சென்றடைய ...

Read More »

கொரோனாவால் யாழில் மேலும் ஐவர் பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின் தகனம் செய்யப்பட்டன. மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.அதன்படி வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

Read More »

அரசியல் கைதி தீடீர் மரணம்

2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று தீடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த நிலையில் தனது 41வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 2006 ம் ...

Read More »

சிட்னி நகர் இரண்டு வாரங்களுக்கு முடக்கம்

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரின் அனைத்து பாகங்களிலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் திரிபு பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று மாலை 6 மணிமுதல், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 650,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. 10,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

‘‘காலனியாதிக்க மனநிலை’’- வளர்ந்த நாடுகள் மீது உலக சுகாதார நிறுவனம் சாடல்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை சரியாக பாதுகாக்கும் நல்ல கட்டமைப்பு இல்லை என வளர்ந்த நாடுகள் கூறுவது காலனியாதிக்க மனநிலையை காட்டுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்காக கோவேக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை 132 ...

Read More »

ஆஸ்திரேலியாவின் பிரபல ‘Spelling Bee’ ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.

Read More »