Tag Archives: ஆசிரியர்தெரிவு

வடமாகாண முதலமைச்சராக சி.வி.கே.சிவஞானம்?

விசாரணைக்குழு அறிக்கையின்படி வடமாகாண அமைச்சர்கள் நான்குபேருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தநிலையில் இருவரை பதவி விலகுமாறும், மற்றைய இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார். முதலமைச்சரின் இச்செயற்பாடானது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் நியாயத்தைக் கேக்காது தன்னிச்சையாக கட்டாய விடுப்புவழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்நடவடிக்கை அரசியல் மட்டத்தில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. முதலமைச்சரின் இந்நடவடிக்கையையடுத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனடிப்படையில் ...

Read More »

பதவியை காப்பாற்ற மைத்திரி காலில் வீழ்ந்தார் சத்தியலிங்கம்!

தனது அமைச்சுப்பதவியினை காப்பாற்றுமாறு இலங்கை ஜனாதிபதியின் கால்களினில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் காலில் வீழ்ந்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சத்தியலிங்கத்தின் நண்பரான வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே செய்துவழங்கியுள்ளார். வடமாகாண அமைச்சர்களது ஊழல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சரவையினை கலைப்பது பற்றி சிந்தித்துவருவதாக நம்பப்படுகின்றது.இந்நிலையினில் தனது அமைச்சு பதவியினை காப்பாற்றிக்கொள்ள இலங்கை ஜனாதிபதியின் காலில் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் ...

Read More »

ராஜாவை காப்பாற்ற முனையும் இராஜவரோதயம்….! – கஜேந்திரகுமார்

சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வாய்கிழியக் கத்திக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சி இன்று ...

Read More »

திருமுருகன் காந்தியையும் 3 தோழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி யாழில் கவனயீப்பு போராட்டம் !

இன்று (8) தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  திருமுருகன் காந்தியையும் 3 தோழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி யாழில் கவனயீப்பு   போராட்டம் நடைபெற்றது.

Read More »

ஊர்காவற்துறையில், கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் தொல்லியல் சின்னங்கள்!

தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், அதில் உல்லாச விடுதியினையும் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு இருக்கின்ற நிலையில் மேற்படிச் சின்னங்களை சேதப்படுத்தல், அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல், அதனை உரிமை கோரல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறைக் கடற்கோட்டையானது போர்த்துக்கேயரினால் 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோட்டையாகும். இக்கடற்கோட்டையினை கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தியதுடன், தற்போது உல்லாச விடுதியினை நடத்துவதன் மூலம் அதிகளவிலான ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பட்டிமன்றமாக மாறிவிட்டது!

காணாமல் ஆக்கப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஐயப்படுவதும், இது விடயத்தில் இவரது விரல் தமக்குப் பின்னால் வந்த ஜனாதிபதி மகிந்தவை நோக்கி நீளுவதும் சாதாரணமான ஒரு செய்தியாகப் பார்க்க முடியாதது. காணாமற் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நூறு நாட்களைத் தாண்டிவிட்டது. இதனை ஒரு விளையாட்டாக அரசாங்கம் கருதி வருகின்றதென்றால், அவர்கள் மொழியில் ஒரு ஷசெஞ்சரி போடப்பட்டுவிட்டது எனலாம். நூறாவது நாள் போராட்டத்தையொட்டி ஏ-9 பிரதான வீதியை மறித்த மக்கள் அன்றைய நாளை குத்துப் போராட்டமாக ...

Read More »

யாழ்.நூலக எரிப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல்! நிகழ்வு

  யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (1)   மாலை 6.00 மணியளவில் யாழ். பொது நூலகம் முன்பாக  இடம்பெற்றது. அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்மகளிர் அணி பொறுப்பாளர்  பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். நினைவு  பகிர்வினை ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் ஜோதிலிங்கம், ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றுச் செவ்வாய்க்கிழமை (30) 100ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், இன்றுக் காலை 10.30 மணியளவில், சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னதாகவுள்ள யு9 வீதியின் இருவழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏ9 வீதியின் போக்குவரத்து, முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதே​வேளை, காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், பொதுமக்களுக்கு ...

Read More »

நயினாதீவில் சிறப்பு பூஜையில் 300 பௌத்த பிக்குகள்!

தென்னிலங்கையி்ல் இருந்து வந்த 300 பௌத்த பிக்குகள் இன்று(28) நயினாதீவில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கை பௌத்த அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில்,  இந்த விசேட பூஜை வழிபாடு நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது. நாவற்குழி பௌத்த விகாரையில் நடத்தப்படவிருந்த இந்த வழிபாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து குறித்த பௌத்த விகாரையின் விகாராதிபதி பூஜையை அங்கே நடத்துவது பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும் என கருதி பூஜைகளை அங்கே நடத்துவதற்கு அனுமதியை மறுத்திருந்தார்.இந்நிலையிலேயே  குறித்த பூஜை வழிபாடு நயினாதீவில் இடம்பெற்று வருகின்றது.

Read More »

வடக்கு- கிழக்கு காணிப் பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம்: கயந்த

வடக்கு- கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அமைச்சரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவமைச்சர், காணி அமைச்சை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நான் பெருமை கொள்கிறேன். இந்த அமைச்சின் மூலம் நாடெங்கும் சென்று மக்களுக்கு சேவையாற்றக் கூடியதாக இருக்கும். வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு ...

Read More »