Tag Archives: ஆசிரியர்தெரிவு

வித்தியாசமான தரமான அற்புதமான பாரம்பர்யமான ஒரு பேய்ப்படம்..! #Hereditary

என்ன சொல்வது ? பல மாதங்களுக்குப் பிறகு புதிர்களுடன் கூடிய ஓர் அட்டகாசமான ஹாரர் திரைப்படம். எல்லாப் புதிர்களுக்கும், படத்துக்குள்ளேயே பதில் இருக்கிறது. ( டிரெய்லரில் வரும் காட்சிகள், படம் பற்றிய குறைந்த பட்ச பேஸிக் ஒன்லைன். இதைத் தாண்டி எந்த ஸ்பாய்லரும், அடுத்த நான்கு பத்திகளில் இருக்கப்போவதில்லை, என்பதால் தொடர்ந்து படிக்கலாம் ) அந்த வீட்டில் இருக்கும் வயதான பெண் (எல்லன் ) இறந்து போகிறார். எல்லன் தன் மகள் ஆனியின் வீட்டில் வசித்து வந்தார். எல்லனின் இறப்புக்குப் பின்னர், ஆனியின் வீட்டில் பல ...

Read More »

டிரம்ப் – கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ...

Read More »

தையலோடு தமிழையும் தேடும் படை! – ‘ழகரம்’ க்ரிஷ்

‘தினம்தோறும்’ படத்தின் மூலம் யதார்த்த இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நாகராஜ். அந்தப் படம் தந்த அடையாளத்தால் ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார். கௌதம் வாசுதேவ் மேனனின் அணியில் முக்கிய அங்கம் வகித்துவரும் நாகராஜின் மகன் க்ரிஷ், ‘ழகரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் நந்தா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிகட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த க்ரிஷிடம் உரையாடியதிலிருந்து… உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம்… சொந்த ஊர் நாகர்கோவில். அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ் ...

Read More »

பிரிவோமாக இருந்தால் எமது மக்களை நாமேஅழித்துவிடுவோம்! -சம்பந்தன்

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டார். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய நீதியரசர் பேசுகிறார் என்ற தலைப்பிலான புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், ...

Read More »

சாந்தபுரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல்!

வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் மற்றயவரை காவல் துறை  மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து காவல் துறை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்து ...

Read More »

இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மென்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும், அவுஸ்ரேலிய அணிக்கு டிம் பெய்னும் தலைமை தாங்கவுள்ளனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. இதேவேளை, அவுஸ்ரேலிய அணி, ஒருபோட்டியிலாவது வெற்றிபெற வேண்டுமென்ற ஆறுதல் வெற்றியை நோக்கி இன்று களமிறங்கும். எதுஎவ்வாறாயினும் இப்போட்டி ...

Read More »

வடகொரியா விவகாரத்தில் டிரம்ப் இரட்டை வேடம்!

வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 12-ந் திகதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை. இன்று ...

Read More »

எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை! – இரா. சம்பந்தன்

பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். சிறிலங்கா வந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் க்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவிற்குமிடையில்நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது நோர்வேயின் இராஜாங்க செயலாளரின் ...

Read More »

மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பம்!

மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன. மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக ...

Read More »

தென் கொரிய கிம் ஜாங் பில் மரணம்!

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 வயதில் முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். தென் கொரியாவில் 1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றார். 1961ல் ராணுவ தளபதி பார்க் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்த ...

Read More »