Tag Archives: ஆசிரியர்தெரிவு

இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்?

ஓன்றில் அதிகாரத்தைக் குறைப்பது; அல்லது, குடியேற்றத்தை நிகழ்த்தி இனப்பரம்பலைக் குறைப்பது. இதுதான், இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரம். இரண்டும் நல்ல திட்டமே! திட்டமிட்ட வகையில் நடைபெறும்  குடியேற்றங்களால், தமிழர்களின் வடக்கு – கிழக்கு பூர்வீக தாயகம் என்ற நிலைப்பாட்டில், நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற விடாப்பிடியே இதிலிருந்து புலப்படும். இந்த வகையில்தான், இலங்கையின்  சிங்கள பெரும்பான்மை அரசுகள், தமிழர்களின் மரபுவழித் தாயக நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு   சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டும் பலமுடையதாக ...

Read More »

சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுடன் எல்லை நிர்ணயத்தின் ஊடாக இணைக்க மேற்கொள்ளப்படும் செயற்பாட்டை கண்டித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று (29) இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், வவுனியாவில் போராட்டத்தில் இடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற ...

Read More »

சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு  சீனா சேர்த்துவிட்டுள்ளது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால்  கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

வட மாகாண முன்னாள் ஆளுநர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு?

இரண்டு ஆணைக்குழுக்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுந்தரம் அருமைநாயகம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Read More »

சீனாவின் புதிய எல்லைச் சட்டம்; இந்தியாவிற்கான கவலைகள் என்ன?

அக்டோபர் 23 அன்று, சீனாவின் சம்பிரதாயமான ஆனால் உயர்மட்ட சட்டமன்ற அமைப்பான தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு, “நாட்டின் நில எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சுரண்டலுக்கான” புதிய நிலச் சட்டத்தை நிறைவேற்றியது, இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது. சட்டம் என்பது குறிப்பாக இந்தியாவுடனான எல்லைக்காக அல்ல; எவ்வாறாயினும், 3,488-கிமீ எல்லை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது, மேலும் 17 மாத கால இராணுவ நிலைப்பாட்டின் தீர்வில் மேலும் தடைகளை உருவாக்கலாம் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். ...

Read More »

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து தனது உறுப்பினர்களிற்கும் கலந்துகொண்டவர்களிற்கும் தெரிவிக்குமாறு அம்பிகா சற்குணநாதனிற்கு அழைப்பு விடுத்திருந்தது. அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக இரு முக்கிய தலையீடுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் ...

Read More »

முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தநிலையில் மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக ...

Read More »

அரசாங்கத்தை விமர்சித்தவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார்

சிரேஷ்ட  பேராசிரியர் புத்தி மரம்பே விவசாய அமைச்சில் அவர் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் – தேசிய விவசாயக் கொள்கையை உருவாக்க நிபுணர் குழு, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம், சிறு உடமையாளர் விவசாயக் கூட்டுத் திட்டம் ஆகியவற்றில் வகித்த பதவிகளில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவர் வகித்த பதவிகளில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பில் கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகதி

தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னின் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கணக்குப்படி, அத்தடுப்பில் உள்ள 15 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

6 இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Read More »