Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள். இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) ...

Read More »

இந்தியாவில் தயாரான Covid தடுப்பூசியை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது

மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration (TGA) மேலும் இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. Covaxin மற்றும் BBIBP-CorV தடுப்பூசிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிகள் என்பதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் பலர் நாடு திரும்ப ஒழுங்குகள் மேற் கொண்டுள்ளார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட BBIBP-CorV தடுப்பூசிகளை TGA அங்கீகரிப்பதாகக் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இந்தத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் இந்நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக TGA வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. TGA அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஒன்றை ...

Read More »

முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்

ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின. தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொதுவெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு ...

Read More »

கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி

வெளிநாடு பயணிகளின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார மையம் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, சிகிச்சை முறை பொருட்கள் நிர்வாகம் (டிஜிஏ), ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாவது:- சர்வதேச அளவில் பயன்பாட்டில் ...

Read More »

தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என்கிறார் ஞானசார தேரர்

ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தாலும் இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கின்றார்களா முஸ்லீம்கள்இருக்கின்றாhகளா என கேட்கின்றார்கள் என தெரிவித்துள்ள அவர் ஏன் அப்படி கேட்கின்றார்கள் திறமையே முக்கியமானது திறமைக்கு வாய்ப்பளிக்கும்போது தமிழர் முஸ்லீம் சிங்களவர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார். கண்டி தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அதனை யாழ்ப்பாண தமிழர்கள் ...

Read More »

குற்றங்களைப் புரிந்தவர்களும் குற்றங்களுக்குப் பங்கானவர்களும் குற்றவாளியைத் தேடுகிறார்களா?

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தவேளை அதில் பங்காளியானவர்கள் இன்று மனித உரிமை மீறல்களையும், மனிதகுல விரோத செயற்பாடுகளையும் விசாரிக்க முன்னிற்கின்றனர். இத்தகைய நாடுகள் பற்றி அமெரிக்க வெளியுறவு முன்னாள் செயலாளர் தெரிவித்த கருத்து, ‘நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் மட்டுமே நாடுபவை” என்பது. முக்காலமும் பொருந்தும் இவ்வாசகம் தமிழர் மனதில் எக்காலமும் கல்வெட்டாக இருக்க வேண்டியது.  தமிழர் தேசத்தையும் தமிழ்த் தேசியத்தையும் முன்னிறுத்தி இடம்பெறும் பல செயற்பாடுகள் இக்காலத்தில் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே சில விடயங்களில் முக்கிய வகிபாகத்தை ...

Read More »

5 முதல் 11 வயதினருக்கு பைசர் தடுப்பூசி

பைசர் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த ...

Read More »

மனதை ரணமாக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு மையத்தின் நிலை

“அவர்கள் இதனை ஹோட்டல் என்கிறார்கள், ஆனால் இது ஒரு சிறை. தனியார் கையில் உள்ள சிறை. இந்த அகதிகளின் துயரத்தை வைத்து மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். மெல்பேர்ன் நகரின் நடுவே உள்ள கறை இது. இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் அரண் மயில்வாகனம்.

Read More »

குறைவாக சாப்பிடுங்கள் என மக்களுக்கு உத்தரவு பிறப்பித்த கிம் ஜாங் அன்

1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால் வடகொரியா பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது. இந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தோன்றியது. இதன்காரணமாக தனது எல்லைகளை வடகொரியா மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தி விட்டது. இதனால் ...

Read More »