Tag Archives: ஆசிரியர்தெரிவு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! புதிதாக குற்றங்கள் சேர்ப்பு!

74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பல புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும். அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டம் பழைய பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை தவிர இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் செயற்படுவது குற்றமாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் ...

Read More »

சிறீலங்காவின் புதிய அரசியல் யாப்பு தமிழருக்கான சர்வரோக நிவாரணி!?

எஞ்சியிருக்கும் தமிழரையும் ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களுக்கு விமோசனம் வழங்கத் தயாரென மகிந்த அறிவித்துள்ளார். அவரது அகராதியில் விமோசனம் என்பதன் அர்த்தம் தமிழர்களை மறுஉலகுக்கு அனுப்பி வைப்பதே. இலங்கையில் இந்த மாதம் முதலாம் திகதி ஆங்காங்கே நடைபெற்ற மே தினக் கூட்டங்களின் முழக்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் ஏறுமாறாகவும், எதிர்கால எதிர்வுகூறலாகவும் எடுப்புத் தொடுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பித்தளை முலாம் பூசப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையிலான நீலக்கட்சி இரண்டு அணியாகப் பிளவுபட்டு, தமக்குள் மோதிக் கொண்ட மிகப்பெரிய பகிரங்க நிகழ்வாகவும் மாறிக் கொண்டது இதிலுள்ள முக்கியம். நீலக் ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கான அமைச்சரவை அங்கிகாரத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.   கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால், நேற்று (04) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,   பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான அங்கிகாரத்தை, கடந்த மாதம் 25ஆம் திகதியன்று, அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் எங்களிடம் எவ்விதமான ஆலோசனையும் பெறப்படவில்லை. இதன் மூலம் சிவில் உரிமைகள் குறைக்கப்படுவதுடன், துஷ்பிரயோகத்துக்கும் சித்திரவதைக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.   அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் ...

Read More »

கொழும்பு – அவுஸ்ரேலியா இடையே நேரடி விமான சேவை விரைவில்!

இலங்கையர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு – மெல்போர்ன் இடையிலான விமான சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்பட்ட சேவைகளை மீளத் தொடங்க இரு நாடுகளும் இணங்கியிருப்பதாகவும், இதன்படி ஏ330 எயார்பஸ் ரக விமானம் மூலமான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், கொழும்பு ...

Read More »

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், ஊடக அடக்குமுறைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ். பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்னால் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி ...

Read More »

கொக்கிளாயினில் சிங்கள மீனவர்களின் அட்டகாசம்!

கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக தொழில் செய்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை பிரச்சினைக்குரிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உழவு இயந்திரத்தை பயன்படுத்தும் சட்டவிரோத மீன்பிடியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு ...

Read More »

மக்களை மறைமுகமாக மிரண்டும் மாவை!

விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற ...

Read More »

மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது. முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் ...

Read More »

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன்

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று(28) காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னணியில் இருந்தார். வாக்குப் பதிவின் நிறைவில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா போராசிரியர் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் இடங்களில் நிற்க மூன்றாவது இடத்துக்கான தெரிவு சமநிலையில் இருந்ததனால் மறு வாக்குப் பதிவின் ...

Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தல்

அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா சென்றிருந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு ...

Read More »