நோ்காணல்முரசு

அரசியல் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்!- நடிகர் கார்த்தி

ஊடகங்களை வெவ்வேறு தரப்பினரும் எப்படிப் பார்க்கிறார்கள்? ஊடகங்களிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? இப்படி ஒரு கேள்வியுடன் ‘ஊடகங்கள்… ஊடலும் உறவும்!’ எனும் கலந்துரையாடலை நடத்தியது ‘இந்து தமிழ்’ நாளிதழ். ஈரோட்டில் சில நாட்களுக்கு முன் ‘சக்தி மசாலா’ நிறுவனம் நடத்திய ஐம்பெரும் விழாவின் ஊடாக நடந்த முதல் கலந்துரையாடலில் பங்கேற்றவர் நடிகர் கார்த்தி. வேளாளர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவ – மாணவியர் உற்சாகமான ஆர்ப்பரிப்பின் நடுவே ‘இந்து தமிழ்’ நாளிதழின் முகவர்கள் – விற்பனையாளர்கள், வாசகர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கார்த்தியுடன் கலந்துரையாடினார் ...

Read More »

நாடாளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை!

சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு  கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்கள் உள்ளார்கள். எம்மூன்று ...

Read More »

யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்! -நேர்காணல்

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் பெற்றோரையும் அவர்களின் அரவணைப்பையும் இழந்து ஆபத்தில் தவித்த சிறுவர்களுக்கென ஓர் அன்பான இல்லம் அமைக்கவேண்டும் என்ற முயற்சியின் பயனாய் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் 6ஆவது சிறுவர் கிராமமாக யாழ்ப்பாணத்தில் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” அமைக்கப்பட்டது. யாழ். நகரில் இருந்து 4.5 கிலோ மீற்றர் தொலைவில் நாயன்மார்க்கட்டு பிரதேசத்தில் குறித்த ...

Read More »

புலனாய்வுப் பத்திரிகையாளர் நிக் டேவீஸ் பேட்டி

புகழ்பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளரான நிக் டேவீஸ் நல்ல நாவலாசிரியரும்கூட. அரசும் ஆட்சியாளர்களும் மறைக்க நினைக்கும் ரகசியங்களைத் தேடிக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் இவர், ‘விக்கி லீக்ஸ்’ பல உண்மைகளை அம்பலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பிரிட்டனில் ரூபர்ட் முர்தோச்சின் ஊடக சாம்ராஜ்யம் தொடர்பான தகவல்களுடன், ‘நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ பத்திரிகை ஒட்டுக்கேட்பு விவகாரத்தையும் எழுதினார். தான் வழங்கிய புலனாய்வுச் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு நூல்களையும் எழுதுவது இவருடைய வழக்கம். ஒவ்வொரு முறை புத்தகம் எழுதும்போதும் பெரிய போராட்டமாகத்தான் இருக்கிறதா? புத்தகம் எழுதுவது கடினமான வேலை தான்; ...

Read More »