ஆசிரியமுரசு

நெல்சிப் ஊழல் அறிக்கை முடக்கி வைக்கப்பட்டிருந்ததா?

வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை வெளியிட்டமை அம்பலமாகியுள்ளது. நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவரை கொண்ட குழுவொன்று 2015ம் ஆண்டின் பெப்ரவரி நியமிக்கப்பட்டிருந்த போதும் அதன் அறிக்கை அதே ஆண்டின் நவம்பர் மாதம் வடமாகாணசபை வசம் கையளிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இந்நிலையில் நெல்சிப் ஊழல்கள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் தனது அறிக்கையினை ஆளுநரிற்கு அனுப்பியுள்ளது. இதனிடையே வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கையும் கிடைக்கப்பெற்று ஒருவருடம் ...

Read More »

அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம்

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு,  நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக நீண்டநாட்களாக அமெரிக்கா – அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், ரொனால்ட் ரம்ப் அதிபராகப் பதவி ...

Read More »

விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்டஓர் இளம் தலைவன் மாமனிதர் நடராஜா ரவிராஜ்!

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார் . ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், ...

Read More »

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்! – ச.பொட்டு அம்மான்

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் ...

Read More »

விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!!!

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை ...

Read More »

குவின்ஸ்லாந்து – தமிழ் எழுத்தாளர் விழா -2016

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு 27 – 08 – 2016 இல் கோல்ட்கோஸ்டில் நடைபெறும். நடைபெறும் இடம்:   Auditorium, Helensvale Library, Helensvale Plaza Helensvale 4212, Gold coast, QLD இவ்விழாவில் கண்காட்சிகள், கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, ...

Read More »