Uncategorised

கொவிட்-19: எட்டாவது சிறைக் கைதி உயிரிழப்பு!

இலங்கையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் நேற்றிரவு(13) உயிரிழந்துள்ளார். இதன்படி சிறைகளில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இதுவரை 3850 கைதிகளும் 123 அதிகாரிகளும் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தற்போது 285 கைதிகளும் 6 அதிகாரிகளும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞன்!

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தங்கியிருந்த அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற் கொலை என கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது சடலத்தை அடையாளம் காண காவல் துறை நிலையத்திற்கு அழைத்து ...

Read More »

அப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்!

அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் அப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்றாவது காலாண்டில் அப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீன நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியா உள்பட இதர சந்தைகளில் Mi பேன்ட் 3 சாதனம் அதிகளவு விற்பனையை பெற்று வரும் நிலையில், சியோமி நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் 21.5 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 13.1 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது ...

Read More »

தொலைபேசி அழைப்பால் பதவியை இழக்கும் நிலையில் சிறிலங்காவின் ஒஸ்ரியா தூதுவர்!

ஐரோப்பிய நாடான ஒஸ்ரியா   தூதுவர்  சிறிலங்காவின் தூதுவர் உட்படஅவரது அதிகாரிகளை உடனடியாக நாட்டிற்கு திருப்பி அழைத்திருக்கின்றார் சிறிலங்கா அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன. சிறிலங்கா அரச தலைவருக்கு நேற்று முன்தினம் ஒஸ்ரியாவிற்கான சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவுடன் அவசரமாக கலந்தரையாட வேண்டிய தேவையொன்று எழுந்திருக்கின்றது. அவரது உத்தரவிற்கு அமைய ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஒஸ்ரியா  தூதுவர் மற்றும் அவரது அதிகாரிகளை தொலைபேசியில்தொடர்பு கொள்ள அழைப்பை எடுத்துள்ளனர். எனினும் சமார் நான்கு மணித்தியாலங்களாக மேற்கொண்ட முயற்சிகள்பலனளிக்காத நிலையில், தூதரக காவலாளி ஒருவர் ஜனாதிபதி செயலகத்தின் தொலைபேசிஅழைப்பிற்கு பதிலளித்திருக்கின்றார். அதன்போது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் முழுமையான தகவல்களைப் பெற வாய்ப்பு!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரியவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதுடன் அவர்கள் நாட்டுக்கும் திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. TPV எனப்படும் தற்காலிக விசா காலாவதியாவதற்கு முன்னரே இந்த விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். அத்துடன் நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் குடியுரிமை பெறும் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் கடினமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இது குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், விசா குறித்த விடயங்கள் பற்றி தெளிவு பெறுவதற்கும் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையும் தமிழ்த் ...

Read More »

அவுஸ்ரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் அவுஸ்ரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. அவுஸ்ரேலியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், ஆஸ்திரேலியா 217 ரன்களும் சேர்த்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வங்காள ...

Read More »

ஆவணப்படமே மிகச் சிறந்த ஊடகம்! – சொர்ணவேல் ஈஸ்வரன்

‘தங்கம்’(1995) படத்தின் மூலம் ஆவணப்பட உலகில் தனித்து அடையாளம் காணப்பட்டவர் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக்கல்வியைப் பயிற்றுவிக்கும் இணைப்பேராசிரியராகத் தற்போது பணியாற்றிவருகிறார். பத்துக்கும் அதிகமான இவரது ஆவணப்படங்கள், சர்வதேச பட விழாக்களில் திரையிடத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு, பல விருதுகளையும் பெற்றுள்ளன. ஆவணப்படங்களை ‘நியூஸ் ரீல்’ என்ற புரிதலுடன் புறந்தள்ளும், தமிழ், இந்தியச் சூழலில், அவற்றை யதார்த்த அழகியலுடன் முன்வைத்துப் பார்வையாளர்களைத் ...

Read More »

பாராளுமன்ற நாயகர்கள் அல்ல பங்களா நாயகர்கள்!

ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல. அண்மைக்காலமாகத் தமிழரசுக்கட்சித் தலைவர்களது சொத்து சேர்ப்பு வேகம் சாதாரண மக்களிடையே அச்சத்துடன் பார்க்கப்படுகின்றது. அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பங்களா கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டுவருகின்றார். ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள பங்களாக்களிற்கு மேலாக தற்போது மாவிட்டபுரத்தில் தனது கனவு இல்லத்தினை மாவை வேக வேகமாக கட்டிவருகின்றார். இது பற்றி மற்றொரு ...

Read More »

இன அடக்குமுறைக்கெதிராக ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? – சம்பந்தன்

சிறீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (23)  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன், எதிர்வரும் வெள்ளியன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார். ...

Read More »