Tag Archives: ஆசிரியர்முரசு

காணாமல்போனவர்களின் உறவுகளை உதாசீனம் செய்தார் ஐ.நா.பிரதிநிதி

வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை, மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் தலைமையிலான குழு சந்திக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன், யூலை 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீதியின் ...

Read More »

பழிவாங்கப்படுகின்றோம் – பிலவுக்குடியிருப்பு மக்கள்

முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையான ஒரு மாத காலம், விமானப்படையினருக்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டது. ...

Read More »

வடமாகாண சபையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட இணக்கம்

எதிர்காலத்தில் மோதல்கள் இன்றி வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார். வடமாகாண சபை முறுகல் நிலையின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (24) சந்திப்பு இடம்பெற்றது. வடமாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக இரு அமைச்சர்களை நியமிப்பது என்பது மிகவும் சிறிய விடயம். இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்துக் ...

Read More »

காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் அலுவலகத்தின் கடமை!

காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கடமையென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த அலுவலகத்தினூடாக யாருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த அலுவலகம் தொடர்பாக பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக யுத்த காலப்பகுதியின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதே பிரதான கடமையும் அதிகாரமும் ...

Read More »

போக்கிலிகளான சிவஞானம், சுகிர்தனுக்கு கதிரைகள் பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்துகின்றேன்! சிவகரன்

போக்கிலிகளான சீ.வி.கே சிவஞானம் மற்றும் சுகிர்தன் போனறவர்களிற்கு மாகாணசபையினில் கதிரை பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்தியுள்ளார் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன். அத்துடன் சீ.வி,கே.சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி பதவி ஆசைபிடித்து திரிகின்றார். அவர் தமிழ்தேசிய அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவரல்ல என்றும் அவைத்தலைவர் பதவி ஆசைபிடித்து தானே முதல்வருக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டிய சிவகரன், தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார் மாவை எனவும் அடிப்படை கட்சி கட்டமைப்போடு இருந்த தமிழரசு கட்சியை அழித்து சின்னாபின்னமாக்கிய பெருமை மாவை சேனாதிராயாவையே சாரும் எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ...

Read More »