Tag Archives: ஆசிரியர்தெரிவு

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 21 பேருக்கு தொற்று

யாழ். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை யடுத்து அதில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் எதிர்பாளர்கள் காவல்துறையினர் மோதல்! பலர் கைது!

ஆஸ்ரேலியாவில் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் கோவிட் முடக்க நிலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தை முன்னேடுத்தபோது காவல்துறையின் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. மெல்பேர்ணில் பேரணியில் கலந்துகொண்ட 4,000 பேர் காவல்துறையினரின் தடுப்பை உடைத்துக்கொண்டு சென்றதால் காவல்துறையினர் அவர்கள் மீது மிளகுத் தெளிப்பைத் தெளித்தனர். அத்துடன் 218 பேரைக் கைது செய்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 7 காவல்றையினர் காயமடைந்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக 5,452 அவுஸ்ரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று ...

Read More »

ஆஸ்திரேலிய வீரர் நாதன் ஐ.பி.எல்.லில் ஆடுகிறார்

26 வயதான நாதன் எல்லிஸ் தனது முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். வங்காள தேசத்திற்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார். 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் அதாவது மே 2-ந் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய ...

Read More »

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன. புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் ...

Read More »

மஹிந்த மௌனம் களைய வேண்டும்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மௌனம் களைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர் மேலாண்மை சட்டம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் நினைவுப்படுத்தினார். இந்த சட்டத்தின் பிரகாரம், பேரிடர் மேலாண்மை குழுவொன்றை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறை, அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்;. ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,  அமைச்சர்கள் 15 பேர் ​மற்றும்  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை கொண்டு இந்த குழுவை ...

Read More »

ஜெனீவாவை எதிர்கொள்வதற்கு நாடகம்

கிளிநொச்சியில் கடந்த 12ஆம் திகதி  மிகவும் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமற் போனோருக்கான அலுவலகம்,  எதிர்வரும் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான ஒரு நாடகமே என, வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளோம் என்றும் இதனால்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார். காணாமற் போனோருக்கான அலுவலகம் மீது, சர்வதேசம்  மெல்லிய நம்பிக்கை ...

Read More »

சிறை போன்றதே ஆஸ்திரேலிய தடுப்பு மையங்கள்! -நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி

டோங்கா நாட்டைச் சேர்ந்த Petueli Taufoou ஆஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சிறையில் வாழ்வதைப் போன்றே வாழ்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த மோதல் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது அவரது விசா காலாவதியானதும், 2017 முதல் 2021 வரை குடிவரவுத் தடுப்பு மையங்களில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்பட்ட போது அங்கு அனுப்பப்பட்ட முதல் நபர் இவர் எனப்படுகின்றது. அதியுட்ச பாதுகாப்புடைய இத்தீவு தடுப்பு முகாம் சிறையை விட ...

Read More »

கேரள ஐஎஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமாவை விடுவித்த தலிபான்கள்

கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமா அவரையும் அவரது 5 வயது குழந்தையையும் இந்தியா அழைத்து வர வேண்டும் என கேரளாவில் உள்ள அவரது தாய் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ...

Read More »

சிட்னியில் 5 கி.மீ தொலைவில் எங்கல்லாம் செல்லலாம்?

முடக்க நிலை அறிவிக்கப்பட்ட சிட்னி பெரு நகர் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களது உள்ளூராட்சிப் பகுதிகளில் மட்டும் அல்லது, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியும். உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தை கீழே உள்ள வரை படத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Read More »

வாட்ஸ்அப் செயலியின் அந்த அம்சத்தில் விரைவில் மாற்றம்

வாடஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை தானாக அழிந்து போக செய்யும் அம்சம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் 7 நாட்களில் குறுந்தகவல்கள் அழிந்து போகும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. பின் குறுந்தகவல்கள் 24 மணி நேரத்தில் அழிந்து போகும் வகையில் மாற்றப்பட்டது. அந்த வரிசையில் தற்போது குறுந்தகவல்கள் 90 நாட்கள் கழித்து அழிந்து போக செய்யும் வசதி ...

Read More »