Tag Archives: ஆசிரியர்தெரிவு

தலிபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள்

ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஏராளமான ராணுவ தளவாடங்களை அங்கேயே ...

Read More »

வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கு நடவடிக்கை

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடினார்கள். அதனை தொடர்ந்து என்னோடு கலந்துரையாடினார்கள் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில் நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில் இன்று அந்த நெல்லை பறிமுதல் ...

Read More »

ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிக்க தீர்மானம்!

பாடசாலை ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்தினால் உருவாகியுள்ள நிலைமைக்கு ஏனையசேவைகளிற்கு பாதிப்பு அற்றவிதத்தில் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஊடாக- திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய யோசனை- ஆசிரியர்கள் அதிபர்களின் நீண்டகாலப்போராட்டத்திற்கு தீர்வை காணமுடியும் மீண்டும் இணையவழி கல்வியை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் இது புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என இரண்டு அரச ...

Read More »

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்கின்றன!

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1035 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 714 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள், ஒருவர் 70 வயதுகளில் மற்றவர் 80 வயதுகளில். தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டவர்கள் வயது வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், 40 முதல் 49 வயதுடையவர்கள் விரைவில் தடுப்பூசி முடியும். மளிகை மற்றும் இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொற்று அதிகமாகப் பரவியுள்ள ...

Read More »

கொரோனா தோன்றியது எங்கே?அமெரிக்க உளவு அமைப்புகள் தோல்வி

கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் எங்கே தோன்றியது என்பதை கண்டறிய அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறுகிற நிலைதான் இன்றளவும் நிலவுகிறது. உலகளவில் இந்த தொற்றினால் இதுவரையில் 21 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 06 ஆயிரத்து 244 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது சீனாவின் வுகான் நகர மாமிச ...

Read More »

தடுப்பூசி போட மறுப்பவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என காவல் துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்தார். தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் ...

Read More »

யாழில் 39 வயது பெண் உட்பட இருவர் கொரோனாவால் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்வடைந் துள்ளது.

Read More »

மட்டக்களப்பில் கடந்த ஒரு வாரத்தில் 36 பேர் உயிரிழப்பு:மருத்துவர் மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கடந்த 24 மணித்தியாலமான நேற்று வியாழக் கிழமை காலை 10 மணி வரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ...

Read More »

பாட புத்தகங்களில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகம்

புதிய பாடத்திட்டத்தின்படி, தொடக்கப்பள்ளிகள், சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சோசலிசம் மீதான அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப ஆண்டுகளாக ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்திலும் இந்தக் கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை ...

Read More »

ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது

ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மெல்ட்டன் (Melton) எனும் பகுதியிலுள்ள குருன்ஜங் (Kurunjang) வட்டாரத்தில் அமைந்துள்ளது. குறித்த வீதிக்குத் தமிழ் பெயர் வருவவதற்கு அப்பகுதியில் எம்.ஏ.முஸ்தபா என்பராவார். இப்பகுதியில் பெருமளவு நிலங்கள் முஸ்தபாவுக்குச் சொந்தமானவை. அதனால் அவர் அப்பகுதியில் அமைந்த வீதிக்கு தமிழ் பெயர் ஒன்றை வைப்பதற்குத் தீர்மானித்து அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ...

Read More »