Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஊரடங்கு தொடர்பில் அதிரடி அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு  ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.  

Read More »

பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடை இல்லை!

எங்களுடைய அன்பை வெளிப்படுத்தவும், பாசத்தை உணர்த்தவும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை கலாசாரமாக கொண்டு உள்ளதாக ஒருவர் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கம். அப்போது ஒருவிதமான சத்தத்தையும் எழுப்புவார்கள். அது மட்டுமல்ல இளம் ஜோடிகள் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்து கொள்வார்கள். இந்நிலையில், கொரோனா பரவியதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் கலாசாரத்தை பொதுமக்களால் தொடர முடியவில்லை. இதனால் ...

Read More »

வாகன இறக்குமதி மீதான தடையை நீக்க எத்தகைய தீர்மானமும் மேற்கொள்ளவில்லை

வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தடையை திரும்பப் பெற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும், தற்போதுள்ள இறக்குமதி தடையை எதிர்காலத்தில் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அண்மையில் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »

இலங்கை வரலாற்றிலேயே அரசாங்கம் ஒன்று முதல்முறையாக வங்குரோத்தாகியுள்ளது!

அரசாங்கம் ஒன்று இலங்கை வரலாற்றிலே முதல்முறையாக வங்குரோத்து ஆனது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று மக்களுக்கு உணவு இல்லை, சிறுவர்களுக்குப் பால் இல்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு சீரழிந்துள்ளது என்றும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் பகுதிகளில் மனநல மருத்துவமனைகளை அமைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை போல அவுஸ்திரேலியாவும் வறுமையில் சிக்கலாம்!

அவுஸ்திரேலியா இலங்கையை போல வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளது என அந்த நாட்டின் செல்வந்தப்பெண்மணியொருவர் எச்சரித்துள்ளார். பெரும் செலவீனங்கள் அதிகளவு அரச கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ஜென்டீனா இலங்கை போல அவுஸ்திரேலியாவும் செழிப்பான நிலையிலிருந்து வறுமைக்குள் தள்ளப்படு;ம் என 31 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை கொண்ட அவுஸ்திரேலியாவின் செல்வந்தப்பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் தெரிவித்துள்ளார். தேசத்தின் செல்வத்தை பாதுகாப்பதற்காக சோசலிசத்தின் அழிவுவேலைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா நாளை என்ற நூலில் அவர் இதனை எழுதியுள்ளார்விரைவில் வெளியாகவுள்ள ...

Read More »

2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி

ஐக்கிய அரபு அமீரகம், ரஷியா ஆகிய நாடுகளிலும் அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, அஸ்ட்ரா ஜெனேகா. இது, உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக்கூடியது. இதுதான் இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட். இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து போட்டால் எப்படி இருக்கும் என்பதை ...

Read More »

பொன்னாலையில் 2 வாள்கள் மீட்பு; ஒருவர் கைது

வட்டுக்கோட்டை காவல் துறை பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில், இன்று (27) காலை, இரண்டு வாள்களுடன், சந்தேகநபர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டை காவல் துறைனரும் இணைந்து குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர் . இதன்போது, இரு வாள்கள் மீட்க்கப்பட்டதுடன், வாள்களை கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர். குறித்த சந்தேக நபருக்கு ...

Read More »

2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு

022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வரவு – செலவு திட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு ...

Read More »

ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. தற்போது காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப ...

Read More »

கடல் கடந்த தடுப்பு முகாம் முறையைத் தொடரும் ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலியா- நவுரு இடையிலான ஒப்பந்தம் தஞ்சக் கோரிக்கையாளர் பரிசீலனை முறையை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறியுள்ளார் நவுரு ஜனாதிபதி லைனெல் ஐங்கிமே. “ஆஸ்திரேலியாவால் நவுருவுக்கு கொண்டு வரப்படும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக கையாள்வதற்கான செயல்முறை உருவாக்கப்படும்,” என நவுரு ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

Read More »