Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 20)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்

strike-2

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக இன்று(30) இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும், மற்றும் சிறையில் விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். ...

Read More »

ஒட்டாவா பிரகடனத்தில் ஒப்பமா? முடியாது என்கிறது சிறீ. இராணுவம்!

1000811023untitled-1

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒட்டாவா என அழைக்கப்படும், அனைத்துலக ரீதியில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இதுவரை 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. ...

Read More »

ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதி!

sumanthiran-720x480

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ரவிராஜின் ...

Read More »

ஆழிப் பேரலையினால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

15672641_1389590174409127_2571838458341773169_n

ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். ...

Read More »

ரவிராஜை மீண்டும் கொன்றுவிட்டார்கள்- சிவாஜிலிங்கம்

sivajilingkam

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்: இலங்கை நீதிமன்றுகளின் ஊடாக தீர்வு கிடைக்காதென்ற செய்தி தற்போது உறுதியாக கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர் சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை தருமென்ற எமது நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இத்தீர்ப்பின் மூலம் மீண்டும் ரவிராஜ் படுகொலை ...

Read More »

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு !

n-raviraj

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி இன்று (24) சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக மற்றும் ஏழு பேர் கொண்ட சிங்கள ஜூரிகள் சபை முன்பாக நடந்த நீண்ட தொகுப்புரைகளை அடுத்து, இன்று சனிக்கிழமை அதிகாலையில் ...

Read More »

விரைவில் மாவையின் சுயசரிதை!

mavai-965s

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தனது வாழ்க்கைப்பயணத்தை ஆவணமாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பில் சக அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் தன்னை வலியுறுத்திவருவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அண்மையில் இருளுள் இதய பூமி எனும் மணலாறு நில சுவீகரிப்பு தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிடுகையில் மணலாறின் ஒவ்வொரு அங்குலத்திலும் தனது காலடி பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது சிறைவாழ்வு உள்ளிட்ட அரசியல் ...

Read More »

தமிழீழ மக்களுக்கு அடேல் பாலசிங்கம் அவர்களின் அவசர அறிவிப்பு

adel-balasingam-300x200

20 மார்கழி 2016 ஊடக அறிக்கை எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, எனது அன்புக் கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தம் வசம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அத்தோடு அவரது அஸ்தியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பேழையை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் ...

Read More »

சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை

vigneswaran

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை… இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ...

Read More »

பொருத்து வீடு வேண்டாம்! கிளிநொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!

kilinochi-protest-3

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பொதுமக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்’, ‘விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே’, ‘குசினியில்லா வீடெதற்கு’, போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »