Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 2)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொழும்பு – தூத்­துக்­குடி கப்பல் சேவை ஆரம்­பிக்க நடவடிக்கை!

indi_sl_ship_1507197957

கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்­கு­மி­டையில் பய­ணிகள் கப்பல் சேவை­யொன்றை ஆரம்­பிக்க முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­மென துறை­மு­கங்கள் மற்றும்  கப்­பற்­துறை அமைச்சு தெரி­விக்­கின்­றது. இதற்கு  முன்­னரும் இந்த கப்பல்  சேவையை நடத்த விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­ட­போதும் அதற்கு போது­மான விண்­ணப்­பங்கள் கிடைக்­கா­ததால் மீண்டும் விண்­ணப்­பங்கள்  கோரப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சு தெரி­விக்­கின்­றது. இந்த சேவை ஆரம்­பிக்­கப்­பட்டால்  இந்­தி­யா­வுக்கும்  இலங்­கைக்­கு­மி­டையில் பொரு­ளா­தாரம், சுற்­றுலா மற்றும் தொழில்  வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு  தெரிவிக்கின்றது.

Read More »

கறுப்புக்கொடிகாட்டிய சிவாஜியின் கையைப் பிடித்தார் மைத்திரி!

22405835_1469587509743619_2866525620136577138_n

அரசியல் கைதிகளின் வழக்குகளை இடம்மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தீர்வு வழங்காத ஜனாதிபதியின் யாழ் வருகையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்துதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் கறுப்புக்கொடியுடன் நின்றவர்களைக் கண்டு காரில் ...

Read More »

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்

22473540_981720241979345_2014239521_o

வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை ...

Read More »

சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிக்கு அவசர கடிதம்!

sa_0

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்­க­ளு­டைய வழக்­கு­களை அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு சட்­ட­மா­திபர் திணைக்­களம் மாற்ற வேண்டும் என்னும் நியா­ய­மான கோரிக்­கையை முன்­வைத்து அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள  மூன்று அர­சியல் கைதிகள் தொடர்  உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் ...

Read More »

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

image_3e6bc71868

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது. மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, ...

Read More »

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளது!

tnpf900

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாள் வட்டுவாகல் மற்றும் வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 271.62 ஏக்கர் நிலப்பரப்பு காணி எடுத்தல் சட்டத்தின்கீழ், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கையொப்பத்துடன் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட்

22343972_312648185870312_265274325_o

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர்.

Read More »

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்!

ananthi-sasitharan

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த நிலையில் பப்புவா-நியுகினியா நாட்டிற்குச் சொந்தமான மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து ...

Read More »

இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Ilancheliyan

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ம் திகதி நல்லூரில் வைத்து இளஞ்செழியன் சென்ற வாகனத்தை மறித்து துப்பாக்கிப் பிரயோகம் ...

Read More »

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

suwiss kumar_0

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ...

Read More »