Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 10)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

பளையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – இராணுவம் சுற்றிவளைப்பு

palai-2

பளைப்பகுதியில் பொலிஸார்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இராணுவம் குவிப்பு சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது . இன்று(19) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதிகாலை 3:30 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த ...

Read More »

ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

s30_18738651

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்ட நாள் ...

Read More »

மே18 – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

4d154996cc419f1254bb8d1754ba3d62

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. • கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும். • வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் (ஏ32வீதியில் 46வது கிலோ ...

Read More »

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

Jaffna-university01

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த இருவிடயங்களையும் அரசு கருத்தில் கொண்டு, எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க வேண்டும் என இன்றைய போராட்டத்தில் ...

Read More »

சவேந்திரசில்வாவை நீதிமன்றிற்கு அழைக்க மறுப்பு!

120127164257_shavendra_silva_304x171_bbc_nocredit-e1327725683104 (1)

இனஅழிப்பு போர்க்குற்றவாளிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக முல்லைதீவு நீதிமன்றிற்கு அழைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை முல்லைதீவு நீதிபதி நிராகரித்துள்ளார். இறுதி யுத்த காலத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பினில் வவுனியா மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான ஆரம்ப கட்ட விசாரணைகள் முல்லைதீவு நீதிமன்றினில் நடைபெற்றுவருகின்றது. சுரணடைந்தவர்கள் தொடர்பாக அப்போது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவிற்கே தெரியுமென கூறப்பட்டிருந்த நிலையினில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடும் சட்டத்தரணி மேஜர் ...

Read More »

மோடியும் விக்கியும் இரகசிய உரையாடல் – கூர்ந்து அவதானித்தார் சம்பந்தன்

18359502_10155102565051327_1121901768962278707_o

சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள சிறீலங்கா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று  (11) விசேட இராப்போசன விருந்து ஒன்றினை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், ...

Read More »

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு!

air

தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட, சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட விமான பாகங்களானது, கடந்த 1992ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்ட பலாலி விமானப்படையினருக்குச் சொந்தமான விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விமானப்படையினரின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர். சுமார் 25 வருடங்களின் பின்னர் ...

Read More »

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆவேசம்! வடமாகாண சபை முற்றுகை!

Northern-06-300x200

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று (9) வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதால், உள்ளே செல்ல முடியாது திரும்பி சென்றார். கடந்த பெப்ரவரி 27ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இன்றைய தினமே தீர்வொன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! புதிதாக குற்றங்கள் சேர்ப்பு!

55551

74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பல புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும். அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டம் பழைய பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை தவிர இலங்கையின் ...

Read More »

சிறீலங்காவின் புதிய அரசியல் யாப்பு தமிழருக்கான சர்வரோக நிவாரணி!?

1598533120parlimnt-of-Sri-lanka

எஞ்சியிருக்கும் தமிழரையும் ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களுக்கு விமோசனம் வழங்கத் தயாரென மகிந்த அறிவித்துள்ளார். அவரது அகராதியில் விமோசனம் என்பதன் அர்த்தம் தமிழர்களை மறுஉலகுக்கு அனுப்பி வைப்பதே. இலங்கையில் இந்த மாதம் முதலாம் திகதி ஆங்காங்கே நடைபெற்ற மே தினக் கூட்டங்களின் முழக்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் ஏறுமாறாகவும், எதிர்கால எதிர்வுகூறலாகவும் எடுப்புத் தொடுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பித்தளை முலாம் பூசப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையிலான நீலக்கட்சி இரண்டு அணியாகப் பிளவுபட்டு, தமக்குள் ...

Read More »