Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க இந்தியாவும் மேற்கும் சதி!

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கி, சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயல்கின்றன. இதற்காகவே அவற்றின் எடுபிடிகளான சட்டத்தரணிகளும், தங்களைத் தாங்களே மூத்த அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்களும் தாங்களே நிராகரித்த 13ஐ இப்போது – 30 வருடங்களின் பின்னர் கேட்கிறார்கள். – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை ...

Read More »

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் தடை- வடகொரியா அதிரடி உத்தரவு

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் 11 நாட்கள் தடை விதித்து வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் ...

Read More »

பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள  கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில்  பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன, பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து  அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டு வழிபட்டுவந்தனர். இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத ...

Read More »

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது. இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே உரியவாறான ...

Read More »

கிளிநொச்சியில் அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி காவல் துறைக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் ...

Read More »

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை மீள்குடியமர்த்த உதவி…

Operation #NotForgotten எனும் பிரச்சார செயலின் மூலம் அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அகதி கவுன்சில், MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியமர உதவி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு முதல் பப்பு நியூ கினியா அல்லது நவுருத்தீவில் வைக்கப்பட்டிருந்த 157 அகதிகள் சார்பாக கனடாவில் மீள்குடியமர்த்த விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த கனடா மீள்குடியமர்வு என்பது ஆஸ்திரேலிய- அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தில் விடுப்பட்ட அகதிகளுக்கு நிரந்தரமான வாழ்க்கையை தரும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Read More »

தமிழ்க் குடிமகனாக மாறிய சேரன்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய சேரன், தற்போது தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஸ்ரீ பிரியங்கா – சேரன் இந்நிலையில், ...

Read More »

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய நாடுகளில் தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து ஃபைசர் பயோடெக் நிறுவனம் சார்பில் குறைவான அளவு கொண்ட கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, கிரீஸ் நாடுகளில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஏதென்ஸ் நகரில் உள்ள ...

Read More »

அம்பாறையில் மைக்ரோ ரக கைதுப்பாக்கியை விற்க முயன்ற ஒருவர் கைது!

அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைதுப்பாக்கி ஒன்றை 16 இலட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை காவல் துறையுடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளதாக காரைதீவு காவல் துறையினர்ர் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று காலை காரைதீவு விபுலானந்த வித்தியாலய வீதியிலுள்ள சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி விற்கும் ஒருவரின் வீட்டை இராணுவ புலனாய்வு பிரிவு காவல் துறை  மற்றும் விசேட அதிரப்படையினருடன் இணைந்து குறித்த வீட்டை ...

Read More »

நாளை சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்- ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி

• நாளை டிசம்பர் 15 முதல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். • நியூ சவுத் மாநிலத்தில் கடந்த 10 வாரங்களில் இல்லாதளவுக்கு அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நாளை, டிசம்பர் 15 முதல் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு மாநிலம் தயாராக உள்ளது. • விக்டோரியாவில் mRNA தடுப்பூசி தயாரிப்பு மையத்தை உருவாக்குவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.

Read More »