Tag Archives: ஆசிரி

சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன – இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது .நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது. தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவே, இந்த உடன்பாட்டுக்கு அமையவும், ஒவ்வொருவரும் பரிசீலிக்கப்படுவார்கள்- யாருக்கு உதவி தேவை, யாருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும், ...

Read More »

ஈழ புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது-சிட்னியில் ஆர்ப்பாட்டம்

ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »