வேலையைத் தூக்கியெறிந்த தொகுப்பாளினி!

அவுஸ்திரேலியாவில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் சக ஆண் ஊழியருக்கு நிகரான ஊதியம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி பிரபல பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் Lisa Wilkinson தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த தொகுப்பாளினி Channel 9 தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை (Today Show) Karl Stefanovic உடன் இணைந்து Lisa Wilkinson தொகுத்து வழங்கி வந்தார்.

ஆண் தொகுப்பாளர் Karl ற்கு $2 மில்லியன் ஊதியமும் Lisa இற்கு $1.1 மில்லியன் ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவருக்கு $1.8 மில்லியன் மட்டுமே வழங்க முடியுமெனக் கூறப்பட்டுள்ள நிலையிலேயே Lisa Wilkinson தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை Lisa Wilkinson ஊதியத்தின் சம தன்மையை வலியுறுத்தி வந்த நிலையில் இவ்வாறான அதிரடி முடிவினை எடுத்துள்ளார்.

இந்நிலையில் Lisa Wilkinson இராஜினாமா செய்துள்ள சம்பவம் ஊடகத் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.