எல்லை நிர்­ணயம் குறித்து யோசனைகள் பெறு­வ­தற்கு ஆணைக்­குழு நட­வ­டிக்கை

மாகா­ண­ச­பை­க­ளுக்கு நிர்­வாக மாவட்­டங்­களின்  கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் தேர்தல் தொகு­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான யோச­னைகள் மற்றும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு எல்லை நிர்­ணய ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.

2017 ஆம் ஆண்டு   17ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் வாக்­கெ­டுப்பு திருத்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­ப­டை­யிலே இந்த தேர்தல் தொகு­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­ஆ­ணைக்­கு­ழுவின் செய­லாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க  அறி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில்,

மாகா­ண­ச­பை­க­ளுக்கு குறிப்­பிட்ட நிர்­வாக மாவட்­டத்தின் கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள முழு உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் நூற்­றுக்கு 50 க்கு ஈடான தொகையை தெரிவு செய்­து­கொள்­வ­தற்­காக பொது மக்­க­ளிடம் இந்த யோச­னை­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­ ­வி­ருக்­கின்றோம். அத்­துடன் பொது மக்கள் தங்கள் ஆலோ­ச­னைகள் மற்றும் யோச­னை­களை நவம்பர் மாதம் 2ஆம் திக­தி­வரை  வழங்­கலாம்.

ஆலோ­ச­னைகள் மற்றும் யோச­னை­களை எழுத்­து­மூ­ல­மான அறிக்­கை­யாக அல்­லது கடிதம் ஊடாக  தலைவர், மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய குழு,  எல்லை நிர்­ணய ஆணைக்­குழு, சர்வே ஜனரல் காரி­யா­லய கட்­டி­டத்­தொ­குதி, தபால் பெட்டி இலக்கம் 506, நார­ஹேன்­பிட்டி, கொழும்பு 5 என்ற முக­வ­ரிக்கு அனுப்­ப­வேண்டும். அத்­துடன் எல்லை நிர்­ணய நட­வ­டிக்கை தொடர்­பான தக­வல்கள் தேவைப்­படின் 0112 369452 என்ற இலக்­கத்­துடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம் என்றும் அதன் செய­லாளர் அறி­வித்­துள்ளார்.

மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணயம் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அதன் தலை­வ­ராக கலா­நிதி கே. தவலிங்கம் செயற்படுவதுடன்  கலாநிதி அகில டயஸ் பண்டார, பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ், பீ.எம்.சிறிவர்த்தன, எஸ்.விஜய சந்திரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.