அழிவை சந்திக்கப்போகிறது அவுஸ்திரேலியா: வடகொரியா

அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியா ஆதரிக்குமானால் அவுஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் தென்கொரியாவுக்கு அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop மற்றும் ராணுவத்துறை அமைச்சர் Marise Payne ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்தநிலையில் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் அவுஸ்திரேலியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறியிருந்தனர்.

அவுஸ்திரேலிய அரசின் வெளிப்படையான இந்த ஆதரவு வடகொரியாவுக்கு கடும் சினத்தை உண்டுபண்ணியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவுத்துறை வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான K-C-N-A வழியாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் அரசியல் மற்றும் ராணுவ செயல்களை அவுஸ்திரேலியா ஆதரிப்பதன்மூலம், ஆபத்தான நிலைக்கு அவுஸ்திரேலியா செல்வதாக கடுமையான எச்சரிக்கையினை வடகொரியா விடுத்துள்ளது.

இந்தநிலையில் வடகொரியா எனும் அயோக்கியத்தனமான நாட்டின் பயமுறுத்தலைக்கண்டு தாம் கோழையாகி ஒதுங்கமாட்டோம் என்று அவுஸ்திரேலியாவின் Defence Personnel துறையின் அமைச்சர் Dan Tehan தெரிவித்துள்ளார்…