கொழும்பு – தூத்­துக்­குடி கப்பல் சேவை ஆரம்­பிக்க நடவடிக்கை!

கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்­கு­மி­டையில் பய­ணிகள் கப்பல் சேவை­யொன்றை ஆரம்­பிக்க முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­மென துறை­மு­கங்கள் மற்றும்  கப்­பற்­துறை அமைச்சு தெரி­விக்­கின்­றது.

இதற்கு  முன்­னரும் இந்த கப்பல்  சேவையை நடத்த விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­ட­போதும் அதற்கு போது­மான விண்­ணப்­பங்கள் கிடைக்­கா­ததால் மீண்டும் விண்­ணப்­பங்கள்  கோரப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சு தெரி­விக்­கின்­றது.

இந்த சேவை ஆரம்­பிக்­கப்­பட்டால்  இந்­தி­யா­வுக்கும்  இலங்­கைக்­கு­மி­டையில் பொரு­ளா­தாரம், சுற்­றுலா மற்றும் தொழில்  வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு  தெரிவிக்கின்றது.