மின்சார மயமாகும் கார்கள்!

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஜெனரல் மோட்டார்ஸ், விரைவில் மின்சார கார்களை மட்டுமே தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அமெரிக்க நிறுவனம், கடந்த, 100 ஆண்டுகளாக, பெட்ரோலிய வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்தது.

2016ல் மட்டும், உலகெங்கும் ஒரு கோடி பெட்ரோலிய வாகனங்களை அது விற்பனை செய்துள்ளது. இந்த வகையில், காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. எனவே, 2023க்குள் எல்லா பெட்ரோலிய வாகன உற்பத்திகளையும் நிறுத்திவிடப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக, 2018ல் இரண்டு முழு மின்சார கார்களை அது அறிமுகப்படுத்தும். 2023க்குள் மேலும், 18 முழு மின் கார்களை சந்தைக்குக் கொண்டு வரும்.