ஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கமரா!

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும்.

இந்த கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 லட்சம் போட்டோக்கள் எடுக்க முடியும். ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு போட்டோ ஆக வெளியாகிறது.

விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு வெடிப்பு, வேதியியல் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் இக்கேமரா மூலம் போட்டோ எடுக்க முடியும் என நிபுணர் எளபாஸ் கிறிஸ்டென்சன் தெரிவித்தார்.