Home / செய்திமுரசு / William Angliss கல்வியகம் அவுஸ்திரேலிய தொழிற்கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுடன் முன்னெடுத்த நிகழ்வு
13167_content_William Angliss_1_thinakkural_11-09-2017

William Angliss கல்வியகம் அவுஸ்திரேலிய தொழிற்கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுடன் முன்னெடுத்த நிகழ்வு

William Angliss கல்வியகம் எமது பாரம்பரிய சுவைகள் ((Flavours of our heritage)  என்ற தொனிப்பொருளில் உணவு போசனம் ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அவுஸ்திரேலியாவின் தொழிற்க்கல்வி மற்றும் திறன்  அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெரன் அன்ரூஸ் இந்நிகழ்விற்கு பிரதம  விருந்திரனராக அழைக்கப்பட்டிருந்தார். அவுஸ்திரேலியா மற்றும் மாலைத்தீவிற்கான பிரதி உயர் ஸ்தானிகர் 4 ஆம் ஹுக்கின்ஸ் இன் அழைப்பிற்கமைய அவர் கல்வியகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தலைவர் எரோல் வீரசிங்க, (SLIIT)யின் தலைவரான பேராசிரியர் ரத்நாயக்க, இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் கலாசார சடங்காச்சாரங்களுடன் அவுஸ்திரேலிய விருந்தினர்களால் அழைத்துவரப்பட்டனர்.
பொதுநலவாய கல்வி திணைக்களத்தின் பயிற்சி பிரிவு செயலாளர் மைக்கல் புருன்கிஸ், ஊடக ஆலோசகரும் அன்ரூஸின் உதவியாளருமான மேட் டன்ஸ்டன், கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் அமன்டாடோ, மாலைத்தீவு, பிரதி உயர் ஸ்தானிகர் டிம் ஹுக்கின்ஸ், சிரேஷ்ட ஆலோசகரான பிரியா, ராஜா, அவுஸ்திரேலியாவின் புதுடில்லிக்கான தூதுவர் கனிஷ்க படிடிலியன் ஆகியோரால் கரேன் அன்ரூஸ் அழைத்துவரப்பட்டார்.
இக் கலந்துரையாடலானது WAI Srilanka மற்றும் அவுஸ்திரேலியாவின் தொழிற்ப் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான உறவை கட்டியெழுப்புவதை மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் சிறந்த உலக தரத்திலான உயர் கல்வி தரத்தை கொண்ட நிறுவனமாக விளங்குகின்றது. இரு நாடுகளினதும் பலமான இணைப்பிற்கு william Angliss கல்வியகம் சிறந்த உதாரணம் ஆகும் என்றார். இலங்கையிடமிருந்து தென் ஆசிய நாடுகள் கல்வி கற்றல் நடவடிக்கைகளை கற்றுக்கொள்ள முடியும்.
அவுஸ்திரேலிய தகைமை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பயிற்சியளித்தல் என்பன தொழில்துறைக்கு வேண்டிய ஒன்றாகவும் தொழிலிற்கு தேவையான வழியை தெளிவுப்படுத்துவதோடு மனித வள தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
william Angliss கல்வியகமானது கொழும்பு விருந்தோம்பல் முகாமைத்துவ எகடமி (CAHM) ஆகியவை SLIITஇல் இணைந்து உருவாக்கிய விருந்தோம்பல் எகடமியானது தேசத்தின் பாரிய தனியார் விருந்தோம்பல் எகடமி ஆகும். william Angliss கல்வியகமானது சுற்றுலாத்துறை, உணவு மற்றும் நிகழ்வுகளின் நிலையாகும். william Angliss கல்வியகம் 75 வருட பலமான வரலாற்றை கொண்டது.

அனுபவமிக்க மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் 2 1,500 இற்கு மேற்பட்ட உள்நாட்டு வாடிக்கையாளர் மாணவர்கள் மற்றும் 45 நாடுகளை சேர்ந்த 1,300 சர்வதேச மாணவர்கள் மற்றும் 100,000 பட்டதாரிகளை உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றனர். பயிற்சி சமையலறை, நவீன வதிவிட  உணவகம் உள்ளடங்களாக இது காணப்படுகின்றது.
சமையற்கலையில் கல்வியை தொடர விரும்புவோர் Angliss கல்வியகத்தின் www.cahm.lk என்ற இணையத்தளத்தின் மூலம் தகவல்களை பெறமுடியும்.

About குமரன்

Check Also

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...