விராட் கோலியை சிறந்த தலைவராக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு

விராட் கோலியை சிறந்த தலைவராக கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை அவுஸ்திரேலிய துணை தலைவராக வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்பாட்டிற்கு அவுஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘டோனி தனது கேப்டன் காலத்தில் மிகவும் அமைதியான வீரராக செயல்பட்டார். இதனால் அமைதியான கேப்டன் என்ற பெயரை பெற்றார். கேப்டனாக பல சாதனைகளை படைத்து சிறந்து விளங்கினார். அந்த பணியை தற்போதும் செய்து வருகிறார்.

விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வருகிறார். முன்னாள் கேப்டன் இப்படி செய்வது சிறப்பான விஷயம். டோனி விராட் கோலியை வளர்ப்பது இருவருக்கும் சிறப்பான விஷயம்.

விராட் கோலி அதிக அளவில் தோல்விகளை சந்தித்த கேப்டன் கிடையாது.ஆனால், அணி தோல்வியை சந்தித்து வரும்போதுதான் உண்மையான சவால்கள் அவரை எதிர்நோக்கும். எங்களுக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். அனேகமாக நீங்கள் வித்தியாசமான கேப்டனை பார்க்க இருக்கிறார்கள்’’ என்றார்