குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைக்கும் முனைப்பில் அவுஸ்திரேலிய அரசு!

Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றி அமைக்கப்படவுள்ளது.

ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும்.

அத்துடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.