இறைச்சி சாப்பிடும் விநாயகர் விளம்பர தடைக்கு அவுஸ்ரேலியா மறுப்பு

விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என அவுஸ்ரேலியா நிறுவனம் மறுத்து விட்டது.

இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன.

இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் உள்ள ‘ஏ.எஸ்.பி.’ நிறுவனத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என மறுத்து விட்டது.

இந்த விளம்பரம் எந்த ஒரு நபரையும் விமர்சித்து ஆதாயத்துக்காக சித்தரிக்கப்படவில்லை. அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆட்டிறைச்சி சாப்பிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என கூறியுள்ளது.