சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்திய தொழிலதிபர் Gautam Adani அமைக்கும் நிலக்கரி சுரங்க வேலைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இதன் பின்னணியில் இந்த முயற்ச்சியை எதிர்த்து தாம் இன்று இரவு முதல் ஒரு வாரகாலம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Bowen எனுமிடத்தில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக Frontline Action on Coal and Reef Defenders எனும் அமைப்பு அறிவித்துள்ளது.

16.5 பில்லியன் செலவில் உருவாகும் இந்த சுரங்கத் திட்டம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடல் உயிரினங்களை அழிப்பதன் மூலம் இயற்கைப் பேரழிவையே இது கொண்டுவரும் என்று பலர் கருதுகின்றனர். அத்துடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் இந்த சுரங்கத்தை எதிர்ப்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.