சுறா மீன் குட்டிக்காக தற்காலிக உப்பு நீர்த்தொட்டி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரையில், சுறா மீன் குட்டி ஒன்று கரை ஒதுங்கியது.

இதனைத்தொடர்ந்து அந்த சுறா மீன் குட்டியை கடலில் கொண்டுசென்று விட்டனர். ஆனால், அது மீண்டும் கரையைத் தேடி வந்துள்ளது.

இவ்வாறு 7 முறை கடலில் விடப்பட்டும், சுறா கரை ஒதுங்கியதால், அதனை காப்பாற்ற தற்காலிக உப்பு நீர்த்தொட்டி உருவாக்‍கப்பட்டுள்ளது.

தற்போது இந்த உப்பு நீர்த்தொட்டியில் சுறா மீன் குட்டி விடப்பட்டுள்ளது. எனவே, அந்த சுறாவை உப்பு நீர்த்தொட்டியில் பாதுகாத்து, ஓரிரு நாட்கள் கண்காணித்த பின் ஆழ்கடலில் விட, கடல் வாழ் உயிரின மீன்பண்ணைப் பணியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.