சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது!

சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உலகளவில் 500 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் சிட்னி பல்கலைக்கழகம் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலைவாய்ப்பு பெறுவது இலகு என்பது தொடர்பில், QS Graduate Employability Rankings பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வியின்போது வேலை செய்வதற்கேற்ற தகுதிகளை வளர்ப்பது, பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிய பின்னர் விரைவாக வேலை கிடைத்தல் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மீது இருக்கும் மதிப்பு போன்றவற்றை பிரதானப் படுத்தப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை முதலிடத்தை Stanford பல்கலைக்கழகம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இரண்டாமிடத்தில் California பல்கலைக்கழகமும் காணப்படும் அதேநேரம் Harvard பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை மெல்பேர்ன் பல்கலைக்கழகம் 7ம் இடத்தையும், நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் 36வது இடத்திலும் உள்ளது.

அத்துடன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் 49வது இடத்தையும் பிடித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.