அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்: லட்சுமண்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி அவுஸ்ரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொஅவுஸ்ரேலியாடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை.

கோலியும், ஸ்டீவன் சுமித்தும் நவீன கால கிரிக்கெட்டில் சிறந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்உதாரணமாக அமைந்திருக்கிறது. களம் இறங்கி விட்டால் வெற்றி மட்டுமே நோக்கம். இங்கு நட்பாக இருக்க வேண்டிய தேவையே இல்லை. இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றிக்காக முயற்சிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்ளும் போது போட்டி கடுமையாக இருக்குமே தவிர, நட்புக்கு இடம் இருக்காது.

கோலியும், ஸ்டீவன் சுமித்தும் இளம் வீரர்கள். ஆனால் டெஸ்ட் தொடரின் போது சுமித்தின் கேப்டன்ஷிப் மெச்சும்படி இல்லை. டோனி போன்ற வீரர்கள் அணியில் இருப்பது கோலிக்கு சாதகமான அம்சமாகும். முன்மாதிரியாக இருக்கும் கோலியே, தற்போதைய கட்டத்தில் சுமித்தை விட சிறந்த கேப்டன் ஆவார்’ என்றார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தனது கணிப்பை வெளியிட்ட வி.வி.எஸ்.லட்சுமண், அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.