அவுஸ்ரேலியா, நியூஸி. தொடர்களுக்கான அட்டவணை!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோல் நியூஸிலாந்து தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான -அவுஸ்ரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் திகதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. 21-ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 2-வது போட்டியும், 24-ம் திகதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 3-வது போட்டியும், 28-ம் திகதி பெங்களூருவில் 4வது போட்டியும், அக்டோபர் 1-ம் திகதி நாக்பூரில் 5 வது போட்டியும் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக -அவுஸ்ரேலியா அணி வாரிய தலைவர் லெவன் அணியுடன் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் மோதுகிறது. இந்த ஆட்டம் 12-ம் திகதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டித் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் ராஞ்சியில் அக்டோபர் 7-ம் திகதியும், குவஹாட்டியில் 10-ம் திகதி 2-வது போட்டியும், ஹைதராபாத்தில் 13-ம் தேதி 3-வது போட்டியும் நடைபெறுகிறது.

நியூஸிலாந்து தொடர்

அவுஸ்ரேலிய தொடர் முடிவடைந்ததும் நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 22-ம் திகதி மும்பையிலும், 2-வது ஆட்டம் 25-ம் திகதி புனேவிலும், 3-வது ஆட்டம் 29-ம் தேதி கான்பூரிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. டி 20 தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 1-ம் தேதி டெல்லியிலும், 2-வது ஆட்டம் 4-ம் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது ஆட்டம் 7-ம் திகதி திருவனந்த புரத்திலும் நடக்கிறது.