Home / திரைமுரசு / விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி!
201709070918541975_Varalakshmi-sarathkumar-turns-Villi-to-Vishal_SECVPF

விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி!

நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு சென்று கொண்டிருக்கையில், விஷாலுக்கே வில்லியாக மாறியிருக்கிறாராம் வரலட்சுமி.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’.

விஷால் – மீரா ஜாஸ்மின் – ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, வரலட்சுமி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் இப்படத்திற்காக மதுரை போன்ற பிரமாண்ட செட் சுமார் ரூ.6 கோடி செலவில் சென்னையில் உருவாகி வருகிறது.

இந்த பிரம்மாண்டமான செட் சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. அதில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டிடங்கள் உருவாக்கப்படுகின்றன.

About குமரன்

Check Also

201710271456178409_Parvathi-Saves-drivers-from-accident_SECVPF

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய பார்வதி

கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி காரில் சென்று கொண்டிருந்த போது மிகப்பெரிய ஆபத்தில் இருந்த டிரைவர்களை காப்பாற்றியிருக்கிறார். நடிகை பார்வதி ...