Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு / ஆட்டிறைச்சி விளம்பரத்தில் பிள்ளையார்!
ganesha-yaalaruvi

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் பிள்ளையார்!

ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுள்கள் மற்றும் இறை தூதர்கள், விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக அமைந்துள்ளது.

இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இருப்பினும் அனைத்து மதத்தினரும் உண்ணக்கூடிய ஆட்டிறைச்சியை அடையாளப்படுத்தும் விதமாகவே தாம் அந்த விளம்பரத்தினை அமைத்திருப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் யாருடைய மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் தமக்குக் கிடையாது என்றும் Meat and Livestock Australia நிறுவனம் தெரிவித்துள்ளது.

About குமரன்

Check Also

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...