அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் இதைப் படிங்க!

அவுஸ்திரேலியாவில் EFTPOS, MasterCard, Visa, American Express card என வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தும் போது மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

ஆனால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் Surcharges எனப்படும் மேலதிக கட்டணத்தை அளவுக்கதிகமாக அறவிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 செப்டம்பர் 1 முதல் ஆண்டொன்றுக்கு 25மில்லியன் வருமான மீட்டும் பெரிய நிறுவனங்கள் தம்முடைய விருப்பத்திற்கு Surcharges அறவிட முடியாதென கூறப்பட்டிருந்தது.

Australian Competition and Consumer Commission (ACCC) ஆல் நியமிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டே இதனை அறவிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 2017 செப்டம்பர் 1 முதல் இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாடிக்கையாளர்கள் தாம் பயன்படுத்தும் கடனட்டையைப் பொறுத்து 1-3 சதவீதங்களுக்கு அதிகமாக Surcharges செலுத்த வேண்டியிருக்காது என கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு அதிமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது என கருதினால், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திடம் இது தொடர்பில் கேள்வியெழுப்பலாம்.

அல்லது Australian Competition and Consumer Commission (ACCC) இடம் முறையிடலாம் என உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.