பொம்மைகளைக் குழந்தைகளாக நினைக்கும் தாயுள்ளம்!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் 43 வயது சில்வியா ஹெஸ்ஸெட்ரெனியோவாவுக்கு 57 குழந்தைகள் இருக்கிறதாகச் சொல்கிறார்! இவற்றில் 2 குழந்தைகள் இவர் பெற்றவை. மற்றவை எல்லாம் இவர் உருவாக்கிய பொம்மைகள். நிஜக் குழந்தைகளைப் போலவே பொம்மைகளை உருவாக்குவதில் சில்வியா நிபுணராக இருக்கிறார்.

40-வது பிறந்தநாளின்போதுதான் பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தார். 3 ஆண்டுகளில் 55 பொம்மைகள் சேர்ந்துவிட்டன. கூடம், படுக்கையறை, படிப்பறை, சமையலறை, மாடி என்று வீடு முழுவதும் பொம்மைகள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் பல்வேறு நாட்டு ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார்.

சில பொம்மைகளை அழைத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்கிறார். சில பொம்மைகளை பிக்னிக் அழைத்துச் செல்கிறார். சில பொம்மைகளுடன் பேசுகிறார். இன்னும் சில பொம்மைகளுடன் உறங்குகிறார். சில பொம்மைகளுக்கு பியானோ வகுப்பும் எடுக்கிறார். “என் பொம்மைகளைப் பார்ப்பவர்கள் அவற்றின் நேர்த்தியிலும் அழகிலும் மயங்கிப் பாராட்டுவார்கள். பிறகு, இப்படி ஒரு அசாதாரணமான பொழுதுபோக்கு தேவையா என்றும் கேட்பார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒவ்வொரு பொம்மையும் பிரத்யேகமானது. ஒன்றைப்போல இன்னொன்று கிடையாது. பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது.

எல்லோரும் சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதானே போராடுகிறோம்? எனக்கு அது எளிதாகக் கிடைத்துவிட்டது. என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று நான் யோசிப்பது இல்லை. என் மகள்களும் என்னைப் புரிந்துகொண்டு, பொம்மைகள் செய்வதில் உதவுகிறார்கள்” என்கிறார் சில்வியா.

599cf088dda4c8c8018b4568