விஷால் தங்கை திருமணம்!

தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் ஜி.கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கிர்த்திகா உதயநிதி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி கார்த்தி, பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் சத்ய ஜோதி ஜி.தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன் ராக்லைன் வெங்கடேஷ், ரவி பிரசாத், சுஹாசினி மணிரத்தினம், சுந்தர்.சி, குஷ்பூ, நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, அர்ஜுன் மனைவி ஆஷா ராணி அர்ஜுன், பாண்டிய ராஜன், ப்ரிதிவி ராஜன், ஆர்யா, சிபி ராஜ்,  விக்ராந்த், மானசா ஆகியோரும்,

இயக்குனர்கள் பி.வாசு, மனோபாலா, மிஷ்கின், விஷ்ணுவர்தன், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.