அவுஸ்ரேலியாவில் துடுப்பாட்ட மட்டையால் சக மாணவர்களைத் தாக்கிய மாணவன்!

கான்பராவிலுள்ள உள்ள அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (Australian National University) வகுப்பறையில் ஒரு துடுப்பாட்ட மட்டை (baseball bat) கொண்டு பல மாணவர்களைத் தாக்கிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வகுப்பறையில் துடுப்பாட்ட மட்டையுடன் இன்று காலை நுழைந்த அந்த மாணவரை மற்றைய மாணவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு முன்பாக நான்கு மாணவர்களை அவர் தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், சிலர் தீவிரமாக காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை யாருடைய உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லையென கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதல்தாரி 18 வயதான வெள்ளை இனத்தவரென்றும், தாக்கப்பட்டவர்கள் ஆசியர்கள் என்றும் காவல் துறையினர்  கூறியுள்ளனர்.

இருப்பினும் இந்தத்தாக்குதல் இனவெறியின் வெளிப்பாடு என்று கூற மறுத்துவிட்டதாக தெரியவருகிறது.