வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: அவுஸ்ரேலிய லெவன் அணி அறிவிப்பு

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை தொடங்கும் நிலையில், ஆடும் லெவன் அணியை அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

வங்காள தேசம் –  அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

பெரும்பாலும் போட்டி நடைபெறுவதற்கு சற்று முன்புதான் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பெயரை அணி வெளியிடும். ஆனால் நாளை டாக்காவில் தொடங்கும் முதல் போட்டிக்கான  அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அந்த அணி இன்றே வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஷான் மார்ஸ் மற்றும் ஓ’கீபே ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக கவாஜா மற்றும் அஷ்டோன் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லயன் உடன் இணைந்து அகரும் சுழற்பந்து வீச்சில் பங்கெடுத்துக் கொள்வார்.


 அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர்

வங்காள தேச அணிக்கெதிரான முதல் டெஸ்டிற்கான  அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் விவரம்:-

1. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), 2. டேவிட் வார்னர், 3. மேத்யூ ரென்ஷா, 4. உஸ்மான் கவாஜா, 5. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 6. க்ளென் மேக்ஸ்வெல், 7. வடே, 8. அஷ்டோன் அகர், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. ஜோஷ் ஹசில்வுட்.