அவுஸ்ரேலியா வாங்கடா பாக்கலாம்!- ஷகிப் அல் ஹசன்

அவுஸ்ரேலியா அணியாக இருந்தாலும், எங்க ஊருக்கு வந்தா பயப்பட்டு தான் ஆகனும் என வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் வந்துள்ள அவுஸ்ரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வருகை குறித்து அந்நாட்டு ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷகிப் அல் ஹசன் கெத்து :
அவுஸ்ரேலியா முன்னணி அணியாக இருந்தாலும், எங்கள் ஊருல நாங்க தான் கில்லி. எந்த ஒரு அணியாக இருந்தாலும் எங்கள் சொந்த மண்ணில் எங்களை எதிர்த்து விளையாடுவது மிக சிரமம் தான்.

சொந்த மண்ணில் எங்கள் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் மிக அதிகமாக இருக்கும். அவர்களின் ஆதரவு எபோதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கின்றது.

அதனால் அவுஸ்ரேலியா அணியாக இருந்தாலும் எங்கள் ஊரில் மிக சிரமப்பட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.