வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவையை மீள உரு­வாக்­கு­வதில் சிக்கல்!

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவையை மீள உரு­வாக்­கு­வது மேலும் மேலும் சிக்­க­லா­கிக் கொண்டே செல்­கி­றது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் புதிய அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தில் காட்­டும் தேர்வு முறைமை கட்­சி­க­ளு­டன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தால் தெளி­வான ஓர் அமைச்­ச­ரவை அமை­வது இன்­ன­மும் முடி­வா­க­ வில்லை.

முதன் முத­லில் தான் அமைத்த அமைச்­ச­ர­வை­யைக் கலைத்­து­விட்­டுப் புதி­தாக ஒன்றை அமைக்க முத­ல­மைச்­சர் விரும்­பி­னார். முதல் அமைச்­ச­ர­வை­யில் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்த இரு அமைச்­சர்­கள், ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் சிக்­கிக்­கொண்டு பதவி வில­க­வேண்டி ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்­தார்.

ஆனால், மற்­றைய இரு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்­கு­வது அவ­ருக்கு இல­கு­வாக இருக்­க­வில்லை. எனி­னும் அமைச்­சர் நிய­ம­னத்­தின்­போது தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பழி­வாங்­கு­கி­னார் என்­ப­தால் அந்­தக் கட்சி அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெ­று­வ­தில்லை என்று முடி­வெ­டுத்­தது. அத­னால் சுகா­தார அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான ப.சத்­தி­ய­லிங்­கம் பதவி வில­கி­னார். இத­னால் மூன்­றா­வது அமைச்­சர் பதவி வெற்­றி­ட­மா­னது.

நான்­கா­வது அமைச்­ச­ரான மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தானா­கப் பதவி விலக அடி­யோடு மறுத்­து­விட்­டார். முடிந்­தால் பதவி விலக்­குங்­கள் என்­றார். இதை அடுத்து அவரை பதவி நீக்­கம் செய்­வ­தாக முத­ல­மைச்­சர் வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு அறி­வித்­தார்.

அவ­ரது அமைச்­சுப் பொறுப்­பு­க­ளில் ஒன்றை அமைச்­சர் அனந்தி சசி­த­ர­னுக்கு கொடுப்­ப­து­டன் ஏனை­ய­வற்றை தான் பொறுப்­பேற்­கி­றார் என்­றும் அறி­வித்­தார். அப்­படி தனது அமைச்­சர் ஒரு­வரை பதவி நீக்­கி­விட்டு வேறு ஒரு­வரை நிய­மிக்­கும் அதி­கா­ரம் முத­ல­மைச்­ச­ருக்கு இருக்­கி­றதா என்­பது தொடர்­பில் சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பரிந்­து­ரையை ஆளு­நர் கோரி­யி­ருப்­ப­தால் அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னின் பதவி நீக்­கம் இன்­னும் செல்­லு­ப­டி­யா­கா­ம­லேயே அந்­த­ரத்­தில் தொங்­கு­கி­றது.

இதற்­கி­டை­யில் ரெலோ அமைப்பு சார்­பில் டெனீஸ்­வ­ர­னுக்­குப் பதி­லாக மாகாண சபை உறுப்­பி­னர் க.விந்­தனை அமைச்­சுப் பத­வி­யில் அமர்த்­து­மாறு பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­போ­தும் அதனை நிரா­க­ரித்த முத­ல­மைச்­சர் மருத்­து­வர் குண­சீ­லனை சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிக்க ஆளு­ந­ருக்­குப் பரிந்­து­ரைத்­தி­ருக்­கி­றார்.

முத­ல­மைச்­ச­ரது அந்த நிய­ம­னத்தை ஏற்க ரெலோ உட­ன­டி­யா­கவே மறுத்­து­விட்­டது. அதன் செய­லா­ளர் சிறி­காந்தா முத­ல­மைச்­ச­ருக்கு எழு­திய கடி­தத்­தில் தங்­கள் தெரிவு விந்­தனே, எந்­தக் கார­ண­மாக இருந்­தா­லும் வேறு யாரை­யும் தமது கட்சி சார்­பில் ஏற்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இத­னால் இப்­போது கட்­சி­யின் முடிவை மீறி குண­சீ­லன் பத­வியை ஏற்­பாரா என்­கிற இழு­பறி தோன்­றி­யி­ருக்­கி­றது.
விந்­தனை நிரா­க­ரித்து எழு­திய கடி­தத்­தில் நான்­கா­வது அமைச்­ச­ராக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைச் சேர்ந்த பவன் எனப்­ப­டும் க.சிவ­நே­சனை நிய­மிக்க இருக்­கி­றார் என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்.

பத்­தி­ரி­கை­யா­ளர் சிவ­ராம் கொலை வழக்­கில் சம்­பந்­தப்­பட்­ட­வர் என்று கூறப்­ப­டு­வ­தால் இதே சிவ­நே­ச­னுக்கு அமைச்­சுப் பதவி வழங்க முடி­யாது என்று முன்­னர் அவ­ருக்கே கடி­தம் எழு­தி­ய­வர் முத­ல­மைச்­சர்.
ஆனால் இப்­போது அந்­தக் கொலைக்­குற்­றச்­சாட்­டில் இருந்து பவன் எப்­படி விடு­விக்­கப்­பட்­டார் என்­பதை மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தா­மல், புளொட் அமைப்­பின் தெரிவு அவரே என்­ப­தா­லும் அவ­ருக்­குப் பத­வியை வழங்க முன்­வந்­துள்­ளார் முத­ல­மைச்­சர்.

இதற்­கி­டை­யில் டெனீஸ்­வ­ர­னின் பதவி நீக்­கம் குறித்து சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பரிந்­துரை நேற்று மாலை வரை ஆளு­நர் அலு­வ­ல­கத்­திற்­குக் கிடைக்­க­வில்லை. அனே­க­மாக இன்று அது கிடைக்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஒரு­வேளை டெனீஸ்­வ­ரனை பதவி நீக்­கம் செய்­யும் அதி­கா­ரம் முத­ல­மைச்­ச­ருக்கு இல்லை என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டால் பவ­னின் நிய­ம­னம் கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும். இப்­படி மேலும் மேலும் இடி­யப்­பச் சிக்­க­லுக்­குள் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது வடக்கு மாகாண அமைச்­சர்­கள் நிய­ம­னம்.