டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை கண் அசைவே போதும்.!

சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சீன தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் ஆகியவை இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன, இந்த தொழில்நுட்பம் அனைத்துவகையிலும் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலும் டைப் செய்யப் பயன்படுகிறது, இதை மாற்றும் விதமாக இப்போது சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் கண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் ஒரு புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

தற்போது தொழில்நுட்பம் மிக விரைவாக வளரந்து வருகிறது என்பதற்க்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த கண்  கண்ணாடி ஒரு உதாரணம். இவை எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால், கண் அசைவுகளை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றும் ட்ரைபோஎலெக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது செயல்படும் விதம் பொறுத்தவரை சென்சார்கள் கண் கண்ணாடிகளின் பிரேமில் இணைக்கப்பட்டுள்ளன, அதன்பின் கண் தசைவுகளின் முழுமையாகக் கண்காணிக்கும் வகையில் உள்ளது. கண் அசைவுகளை கட்டளைகளாக மாற்றி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான எலெக்ட்ரானிக் கருவிக்கு கடத்தும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது.

இனி டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை கண் அசைவே போதும்.!

அதன்பின் கண் அசைவுகளின் கட்டளைகளை ஏற்று டைப் செய்ய இவை உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டால் டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை. மேலும் இதைப் பயன்படுத்த கணிகளை ஆன் செய்வது மற்றும் ஆஃப் செய்வதும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.