மோட்டோ X4: விலை மற்றும் முழு தகவல்கள்

மோட்டோரோலாவின் புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் கசிந்துள்ளது. புதிய X4 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X4 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. இதன் விலை ட்விட்டரில் ரோலாண்ட் குவாண்ட் என்ற டிப்ஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது.
குவாண்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய மோட்டோ X4 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 350 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். முன்னதாக எவான் பிளாஸ் மோட்டோ X4 தகவல்களை வெளியிட்டிருந்தார். இவர் வெளியிட்ட புகைப்படத்தில் புதிய ஸ்மார்டபோனின் சில சிறப்பம்சங்கள் தெரியவந்தது.
அதன்படி மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, வளைந்த டிஸ்ப்ளே மற்றும் கிளாஸ்-பேக்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனுடன் இணைக்கப்படிருக்கும் என்றும் கூறப்பட்டது.
புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போன் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும். இதில் அலுமினியம் வடிவமைப்பு மற்றும் IP68 சான்றுடன் கூடிய வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. + 13 எம்.பி. என டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
பென்ச்மார்க்கிங் தளத்தில் XT1789 மாடல் நம்பர் கொண்டிருக்கும் மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 3 ஜிபி ரேம6 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் பல்வேறு மெமரி கொண்ட மாடல்கள் வழங்கப்படும் என்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.