மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்!

லெனோவோ நிறுவனம் அதிகம் எதிரபார்க்கப்பட்ட மோட்டோ Z2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. முந்தைய ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சாதனத்திலும் ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் QHD 1440×2560 பிக்சல் டிஸ்ப்ளே
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
* ஆண்ட்ராய்டு 7.1.1
* 2730 எம்ஏஎச் பேட்டரி
அமெரிக்காவில் ஆகஸ்டு 10-ம் திகதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ Z2 ஃபோர்ஸ் விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபைன் கோல்டு, லூனார் கிரே மற்றும் சூப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கும் மோட்டோ Z2 ஃபோர்ஸ் மற்ற நாடுகளில் விரைவில் விற்பனைக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.